வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல்ஹாசனுக்காக என் உயிரையே கொடுப்பேன்.. மனம் உருகி பேசிய ரஜினி பட வில்லன்

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். பன்முகத் தன்மை கொண்ட இவர் பல புதிய தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ஆகவே அறிமுகமான கமல் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்காக என் உயிரை கொடுப்பேன் என ஒரு நடிகர் மனம் உருகி பேசியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

Also Read : கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் அண்ட் கோ.. கடும் கோபத்தில் ஆப்பு வைக்க ரெடியாகிய தயாரிப்பாளர்

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். முதல்முறையாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கும் சிவராஜ் குமார் அண்மையில் ஒரு பேட்டியில் தனக்கு கமல்ஹாசன் மீது மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் அவருக்காக எதையும் செய்ய தயார், என் உயிரைக் கூட அவருக்காக கொடுப்பேன் என்று சிவராஜ்குமார் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார். சிவராஜ் குமார் கமலின் இப்படி ஒரு தீவிர ரசிகரா என பலரும் வியந்து பார்க்கின்றனர்.

Also Read : மகளுக்காக வெளிநாடு வரை சென்று உரிமத்தை பெற்ற கமல்.. பிரயோஜனம் இல்லாமல் சொதப்பிட்டாங்க!

மேலும் சிவராஜ் குமார் பேசுகையில், எனக்கு அவரை அவளோ பிடிக்கும், நான் ரொம்ப இன்ஸ்பயர் ஆனது கமல்ஹாசனை பார்த்து தான், ஒரு ஹீரோன்னா அவர மாதிரி இருக்கணும் என கூறியுள்ளார். எப்போதுமே கமல் தன்னுடைய எதிர்காலத்தை முன்கூட்டியே தனது படங்களில் சொல்லக்கூடியவர்.

கமல்ஹாசனுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான தீவிர ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது சேவை தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை. இதனால் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இளம் இயக்குனர்களுடன் கமல் பணியாற்ற உள்ளார்.

Also Read : மனநலம் குன்றிய நாயகனாக கமல் அசத்திய 5 படங்கள்.. பயத்திலேயே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தெனாலி

Trending News