வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மூணு மாச கடன் நான்கே நாளில் திருப்பிக் கொடுத்த ரஜினி.. நீங்க கடவுளுக்கும் மேல என புகழும் பிரபலம்

Actor Rajini: தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி மேற்கொண்ட படம் தான் ஜெயிலர். எங்கு திரும்பினாலும் இப்படத்தின் வசூல் குறித்த பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு சம்பவம் செய்த தலைவரை புகழும் பிரபலம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

பல முக்கிய பிரபலங்களுடன் ரஜினி நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் இப்படி ஒரு வசூலா என வாய்ப்பிளக்க செய்யும் இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் தெறிக்க விட்டு வருகிறது.

Also Read: மகள் வயதில் இருக்கும் நடிகையின் மீது இவ்வளவு வெறியா?. ஸ்டார் நடிகரின் முகத்திரையை கிழித்த சர்ச்சை நாயகி

நாளுக்கு நாள் பல கோடிகளை வசூலித்து வரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். சமீபத்தில் வெளியான படங்களை தூக்கி சாப்பிடும் விதமாய் இப்படத்தின் விமர்சனமும், வசூலும் முறியடித்து வருகிறது. மேலும் நீண்ட நாளைக்கு பிறகு இது போன்ற ரஜினி படங்களை பார்த்த திருத்தி இருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் இப்படத்தில் வயலன்ஸ் அதிகமாக இருப்பதாக கூறி சில காட்சிகளை தடை செய்து வருகின்றனர். இருப்பினும் உலகளவில் இப்படத்திற்கான மவுசு அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த படமும் சரிவர ஓடாத காரணத்தால் புலம்பலுக்கு ஆளாகினார்கள் தியேட்டர் ஓனர்கள்.

Also Read: டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

மேலும் கடன் வாங்கி தியேட்டர் ரன் பண்ணும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்த இவர்களின் வாழ்விற்கு விடி வெள்ளியாய் இப்படம் இருந்து வருவதாக பிரபலம் ஒருவர் கூறி வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விநியோகம் படுத்தி பல லாபங்களை கண்டது மட்டுமல்லாது அவற்றை தியேட்டரிக்கள் உரிமம் பெற்று வழங்கிய விநியோகஸ்தர்களும் பெருத்த லாபத்தை பெற்று வருகின்றனர்.

அவ்வாறு மூன்று மாத கடனை, நான்கு நாளில் திருப்பி கொடுக்க செய்தது தலைவரின் படம் எனவும் தயாரிப்பாளர் ஸ்ரீதர் தன் மனநிறைவை வெளிகாட்டி வருகிறார். நான் மட்டும் இல்லை இப்படத்தை விநியோகம் செய்த அனைத்து தியேட்டர் ஓனர்களின் கருத்தும் இதுதான் எனவும் ரஜினியை நெகிழ்ந்து பேசி வருகிறார் ஸ்ரீதர்.

Also Read: ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. அர்ஜுனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லியோ வீடியோ

Trending News