Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த ரெண்டே படங்களால் தனது போக்கை மாற்றிய சூப்பர் ஸ்டார்.. தரனமான முடிவு

இந்த ரெண்டே படங்களால் தனது போக்கை மாற்றிய சூப்பர் ஸ்டார்.. தரனமான முடிவு

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்த இடத்தை அவர் எழுதி பெறவில்லை. இதற்காக அவர் பல […]

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்த இடத்தை அவர் எழுதி பெறவில்லை. இதற்காக அவர் பல கஷ்டங்கள் பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி விடலாம் என்ற எண்ணமும் ரஜினிக்கு இருந்துள்ளது. நடிக்கவும் வரவில்லை, பாஷையும் புரியவில்லை நமக்கு சினிமாவே வேண்டாம் என ரஜினி நினைத்த காலமும் உண்டு. ரஜினியின் குரு இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அறிவுரையால் மீண்டும் சினிமாவில் ரஜினி நடிக்க தொடங்கினார்.

ரஜினி இதுவரை இரண்டே காதல் திரைப்படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1982 வெளியான புதுக்கவிதை என்ற காதல் திரைப்படத்தில் ரஜினி நடித்து வந்தார். இப்படத்தில் ஜோதி, சுகுமாரின், சரிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அதன்பிறகு துவாரகிஷ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை படம் முழுவதும் காதல் படமாக இருந்தது. இந்நிலையில் புதுக்கவிதை மற்றும் நான் அடிமை இல்லை என இந்த இரண்டு படங்களில் மட்டுமே முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இருந்த படங்களில் ரஜினி நடித்திருந்தார்.

அதன்பின்பு காதலை மட்டும் மையப்படுத்திய படங்களில் ரஜினி நடிக்கவில்லை. ஆனால் ரஜினியின் படங்களில் காதல் கதைகளில் இருந்தாலும் முழுவதுமாக இல்லாமல் அது ஒரு ட்ராக் மட்டும் இருக்கும். ரஜினி தனது ரூட்டை மாற்றி ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ரஜினி தளபதி, அண்ணாமலை, படையப்பா, பாட்ஷா போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்த தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். ஆனால், அதன் பிறகு காதல் அம்சம் கொண்ட கதைகள் அமையவில்லையா அல்லது மக்கள் ரஜினியிடமிருந்து கமர்ஷியல் படங்களை எதிர்பார்ப்பதால் இது மாதிரியான படங்களையே தேர்ந்தெடுத்த இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.