வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராணுவத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு போன ஈமெயில்.. வந்த கரும்புள்ளியால் பதறிப்போய் ஆண்டவர் அடித்த அந்தர்பல்டி

Rajkamal Films Removed Amaran’s Controversial Word: கடந்த 2022 விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் உலகநாயகன் கமலஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக கம்பேக் கொடுத்து அதிக பொருட்செலவில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை முன்னணி கதாபாத்திரமாக்கி இரு வேறு விதமான படங்களை தயாரித்து வருகிறார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராணுவத்தில் பணிபுரிந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக்க முயல்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. உண்மைக்கு புறம்பாக எதுவும் கூறாமல் படத்தின் விறுவிறுப்பு தன்மையை அதிகரிக்கும் பொருட்டு கற்பனை கலந்து தனித்துவமான திரைக்கதை அம்சத்துடன் உருவாக்கி வருகிறார் இயக்குனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் அமரன் என பெயரிடப்பட்டு சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை ஒட்டி இதன் பர்ஸ்ட் லுக்  மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என காத்திருந்தது போல், நாலா பக்கமும் பிரச்சனை வீறுநடை போட்டு வந்தது. பட தலைப்பிலிருந்து ஆரம்பித்த சர்ச்சை,ரிலீஸ் செய்யவே கூடாது என்பதுவரை பல ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறி உள்ளது

Also read: அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு.. சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்

அமரன் டீசரில் தீவிரவாதத்திற்கு எதிராக குண்டு சத்தங்கள் முழங்க, துப்பாக்கி சத்தம் காதை பிளக்க. “அச்சமில்லை அச்சமில்லை” என்று வருகிறார் நமது ராணுவ வீரர் முகுந்த். டீசரிலேயே உணர்ச்சி பொங்க வைக்கும் காட்சிகளை அரங்கேற்றி ரசிகர்களின் ஹைப்பை ஏற்றியுள்ளது அமரன்.

இதில் சிவகார்த்திகேயன் ஹூ ஆர் வி? என்று ராணுவ வீரர்களை பார்த்து கேட்கும் போது தீவிரவாதத்திற்கு எதிரான கோபத்துடன் ஒரு கெட்ட வார்த்தையையும் போட்டுவிட்டார். இது தற்போது புயலை கிளப்பி உலக நாயகனுக்கு பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் உள்ள மிலிட்டரி ஆபீஸர் ட்ரைனிங் அகாடமியில் நடத்தப்பட்டது. ராணுவ உடையை அணிந்து கெட்ட வார்த்தை பேசியதை கண்டித்து ராணுவத்திலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு ஈமெயில் பறந்து உள்ளது. இதனால் அரண்டு போன உலக நாயகன் கமலஹாசன் உடனே  இதனை நீக்கும்படி ஏற்பாடு செய்துள்ளாராம். 

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

Trending News