வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னோட லெவலே வேற மாதிரி.. விஜய், சூர்யாவையே தூக்கி எறிந்த ராஷ்மிகா!

கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மூன்று படங்களை தவற விட்டுள்ளார். இந்தப் படங்களின் புரடக்ஷன் டீம் முதலில் இவரை அணுகி உள்ளனர். ஆனால் சில கால்ஷீட் பிரச்சினைகளால் ராஷ்மிகாவால் இந்த மூன்று படங்களிலும் நடிக்க முடியாமல் போனது.

நானி, சாய் பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஷியாம் சிங்க ராய். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பதால் அதில் ஒரு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவை தேர்வு செய்தனர். ஆனால் மற்றொரு கதாநாயகியான சாய் பல்லவி உடன் நடிக்க ராஷ்மிகா மறுத்துவிட்டாராம்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதியின் 65ஆவது படமான பீஸ்ட் படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் முதல் சாய்ஸ். ஆனால் அப்போது ராஷ்மிகா பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அந்த வாய்ப்பு பூஜா ஹெக்டேக்கு சென்றது. இருந்தும் பீஸ்ட் படத்தில் எனக்கு ஸ்கோப் இல்லை என பூஜா ஹெக்டே கூறிவருகிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க முதலில் ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ஒரு சில காரணங்களால் பிரியங்கா அருள் மோகன் தேர்வு செய்யப்பட்டார். ராஷ்மிகா மந்தனா ஷியாம் சிங்க ராய், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் ஆகிய மூன்று படங்களையும் தவறவிட்டு உள்ளார்.

என்ன தான் ஒரு நடிகை 4 மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டாலே சற்று ஆணவம் தலைக்கேறி தான் இருக்கும். அந்த வகையில் விஜய் மற்றும் சூர்யா படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது போன்ற போன்ற கேள்விகளை கோலிவுட் வட்டாரங்கள் எழுப்பி தான் வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா படங்களை தவறவிட்ட ராஷ்மிகாவுக்கு மீண்டும் இவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News