செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு பட கோவை சரளாவுக்கு இத்தனை கோடியா.. நயன்தாராவை ஓவர்டேக் செஞ்சிட்டாங்க போல

வாரிசு திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர். மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களால் இதற்கான அட்வான்ஸ் புக்கிங் மிகவும் வேகமாகி வருகிறது. இதே நாளில் துணிவும் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படங்களின் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.

Also read: வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

மேலும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வந்த பிறகு துணிவு படத்துக்கே அதிகமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. ஆனாலும் வாரிசு படத்தில் ரகசியமாக ஐந்து கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் தற்போது அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா மற்றும் திரிஷாவையே இவர் ஓரம் கட்டி விட்டாராம் அந்த அளவுக்கு அவர் இந்த திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார்.

Also read: வாரிசு படம் அந்த ஹீரோக்களுக்கு போட்டியாக இருக்காது.. உண்மையை உளறிய தில் ராஜு

அந்த வகையில் ராஷ்மிகா வாரிசு படத்தில் நடித்ததற்காக நான்கு கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளிவந்த போது இவர் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார்.

அதிலும் அவர் அணிந்திருந்த உடை கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் கோவை சரளா போன்று இருப்பதாக பல கேலியும் கிண்டல்களும் எழுந்தது. இருந்தாலும் அவர் இப்போது டாப் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Also read: ரேஸ்ல ஃபர்ஸ்ட் போறது முக்கியம் இல்ல, ஜெயிக்கணும்.. வாரிசை பற்றி விஜய்யின் கணிப்பு

Trending News