கிளைமாக்ஸ்ல வரும் பாரு ஒரு ட்விஸ்ட்.. ஓடிடியில் பட்டய கிளப்பும் Azadi, முழு விமர்சனம்

Azadi Movie Review: இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்களை தான் ஆடியன்ஸ் தியேட்டரில் பார்க்க விரும்புகின்றனர். அத்திபூத்தது போல் தான் சில படங்கள் தியேட்டரில் வெற்றி பெறுகிறது.

நன்றாக இருந்தாலும் கூட பல படங்கள் ஓடிடியில் தான் கவனம் பெறுகிறது. அப்படி இப்போது ட்ரெண்ட் ஆகி வரும் படம்தான் Azadi. ஜோ ஜார்ஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி, லால், வாணி விஸ்வநாத், ரவீனா ரவி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெளிவந்த இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் தமிழ் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

முழு விமர்சனம்

பெரிய அரசியல்வாதியின் மகனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் கர்ப்பிணியாக இருக்கும் ரவீனா ரவி. பிரசவம் நெருங்கும் நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்கு சிறை அதிகாரிகள் அனுப்புகின்றனர்.

அங்கு வைத்து ரவீனாவை கடத்துவதற்கு அவருடைய கணவரும் அப்பாவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் போலீசுக்கு இந்த விஷயம் தெரிய வர ஆட்டம் சூடு பிடிக்கிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாதியை பொருத்தவரையில் கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிக்கிறது. சில இடங்களில் லாஜிக் சறுக்கல் உள்ளது.

ஆனால் படத்தில் வரும் திருப்பங்கள் திரைக்கதையை கொண்டு சென்ற விதம் அனைத்தும் லாஜிக் ஓட்டையை மறைக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் இதை எதிர்பார்க்கவே இல்லையே என சபாஷ் போட வைத்திருக்கிறது.

கதைக்கு ஏற்றார் போல் நடிகர்களின் நடிப்பு பிரமாதம். அதேபோல் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அங்கங்கு மெதுவாக நகரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கும்.

ஆனாலும் படம் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகத்தில் இருக்கிறது. வீட்ல போர் அடிக்குது எதாவது படம் பார்க்கலாம் என யோசித்தால் நிச்சயம் இப்படம் உங்களுக்கு டைம் பாஸ் ஆக இருக்கும்.

சினிமா பேட்டை ரேட்டிங் : 3/5