The Hunt Review: இந்திய அரசியல் வரலாற்றை உலுக்கிய மிகப்பெரிய சம்பவம் தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு. அந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தி ஹண்ட் வெப் சீரிஸ் சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது.
புலனாய்வு பத்திரிக்கையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய புத்தகத்தை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நாகேஷ் குக்கூநூரின் இயக்கியுள்ளார். இதன் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
1991ல் சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சார பணிகளுக்காக ராஜீவ் காந்தி வந்திருந்தார். அப்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் உயிரிழந்தார்.
தி ஹன்ட் விமர்சனம்
கடும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளி யார் என்பதை கண்டறிய சிபிஐ தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறது இந்த சீரிஸ்.
உண்மை சம்பவம் என்பதால் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் இருக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் கச்சிதமாக தேர்வு செய்து பாராட்டுகளை தட்டி இருக்கிறார் இயக்குனர்.
அதேபோல் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களும் நடிப்பை கொடுத்துள்ளனர். எதிலும் வித மிஞ்சிய நடிப்பு கிடையாது. 90 காலகட்ட கதை என்பதால் அதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
அதற்கு ஒளிப்பதிவு பக்க பலமாக இருக்கிறது. ஏற்கனவே பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொண்ட கதையாக இருந்தாலும் கூட அடுத்து என்ன என ஆர்வத்தை தூண்டி இருக்கிறார் இயக்குனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு மேலிடத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் தொடங்கி விடுதலை புலிகள் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட விசாரணை முறைகள் வரை அனைத்துமே தத்துரூபமாக இருக்கிறது.
சில விஷயங்களில் இயக்குனர் தடுமாறி இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார். ஆக மொத்தம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் பல விஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.