ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் வாங்கிய சம்பளம்.. 6 வருடத்தில் மலைக்க வைக்கும் அசுர வளர்ச்சி

தற்போது பாக்ஸ் ஆபிஸ் கடவுளாக இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் ஆஸ்தான இயக்குனராக இருப்பது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான். மாநகரம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர் தற்போது லியோ படத்தால் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். இவர் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் முதல் பல நடிகர்களும் காத்து கிடக்கிறார்கள்.

இப்படி குறுகிய காலத்திலேயே லோகேஷ் அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி திரையுலகை கொஞ்சம் மிரள தான் வைத்துள்ளது. அந்த வகையில் மாநகரம் முதல் லியோ திரைப்படம் வரை இவர் வாங்கிய சம்பள பட்டியல் பற்றி இங்கு விரிவாக காண்போம். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகரம் திரைப்படத்திற்காக இவர் மூன்று லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

Also read: நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். அதற்கு இவருக்கு 75 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்படி மாஸ்டர் திரைப்படத்திற்காக முதலில் இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஆனால் அப்போது அந்தப் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பும், ஃப்ரீ ரிலீஸ் பிசினஸும் அதிகமாக இருந்ததால் இவருடைய சம்பளமும் மூன்று கோடியாக உயர்ந்தது. அதை அடுத்து உலக நாயகனுடன் இவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கைகோர்த்தார். கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸையே அடித்து நொறுக்கியது.

Also read: பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூலித்த இந்த திரைப்படத்திற்காக லோகேஷ் 10 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். முதலில் எட்டு கோடியாக பேசப்பட்டு பிறகு 10 கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது அவர் இயக்கி வரும் லியோ படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசப்பட்டு தற்போது அது 20 கோடியாக உயர்ந்துள்ளது. இப்படி இந்த ஆறு வருடங்களிலேயே லோகேஷ் 20 கோடி வரை சம்பளம் வாங்கும் அளவு உயர்த்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்குப் பிறகு அவர் ரஜினியுடன் இணைவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த படத்திற்காக 35 கோடி சம்பளமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக காத்து கிடக்கிறார். அதற்காக 50 கோடி வரை சம்பளம் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு டாப் ஹீரோக்கள் அனைவரும் இவருக்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். இருப்பினும் தற்போது லோகேஷ் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக இருப்பதால் இவர்கள் சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும். அந்த வகையில் லோகேஷின் மார்க்கெட் தற்போது 50 கோடி வரை உயர்ந்து இருந்தாலும் லியோ பட ரிலீசுக்கு பிறகு இது பல மடங்காக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: அடுத்த சூப்பர் ஸ்டாராக பிளான் போடும் விஜய்.. சத்தம் இல்லாமல் தளபதி இடத்தை பறிக்கும் நடிகர்

Trending News