Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப் பட பிரபலங்களின் சம்பளம்.. லாபத்தை பங்கு போடும் கமல், மணிரத்னம்

தக் லைஃப் பட பிரபலங்களின் சம்பளம்.. லாபத்தை பங்கு போடும் கமல், மணிரத்னம்

Kamal : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி போன்ற பலர் நடித்துள்ளனர். இப்போது பிரமோஷன் மற்றும் ப்ரீ […]

Kamal : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி போன்ற பலர் நடித்துள்ளனர். இப்போது பிரமோஷன் மற்றும் ப்ரீ புக்கிங் ஆகியவை நடந்து வருகிறது.

கமல் கன்னட மொழியை பற்றி பேசிய நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை செய்துள்ளனர். மேலும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த சூழலில் இந்த படத்தில் பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் படத்தை தயாரித்து உள்ளதால் வரும் லாபத்தில் இவர்கள் பங்கு போட்டுக்கொள்ள இருக்கிறார்கள். இந்த படத்திற்கு என்று தனியாக சம்பளம் வாங்கவில்லை.

தக் லைஃப் படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பள விபரம்

அடுத்ததாக படத்தில் கமலுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார். ஆகையால் இவருக்கு 40 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கமல் மற்றும் சிம்பு இருவரும் கழுத்தை நெரிக்கும் காட்சிகள் அட்டகாசமாக அமைந்திருக்கிறது.

அடுத்ததாக படத்தின் கதாநாயகி திரிஷாவுக்கு 12 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்திராணி என்ற பாடகி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கிறார். மேலும் குட் பேட் அக்லி படத்தில் மூன்று கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இப்போது பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

மேலும் அசோக் செல்வன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இருவருக்கும் தலா ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை அபிராமி 50 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார். இதில் சிம்புக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.