Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

புது நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. மீண்டு வருகிறேன் என உருக்கம்

புது நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. மீண்டு வருகிறேன் என உருக்கம்

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களது திருமணம் […]

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த சமந்தா நாக சைதன்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தனர். இருவரும் சேர்ந்து மஜ்லி திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்கள். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் அமைந்தது.

தற்போது இருவரும் பிரிந்துள்ள நிலையில், நாக சைதன்யா சோபிதா துளிபலாவை கரம் பிடிக்க உள்ளார். இப்படி இருக்க, சமந்தாவோ, தன்னுடைய கேரியரை கவனித்து வருகிறார். சீட்டாடல் வெப் தொடரில் நடித்திருக்கும் சமந்தா, ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சமந்தா புதிய ஆண் நண்பருடன் நிகழ்ச்சி ஒன்றில் அவரின் கையை பிடித்து இழுத்த வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் ? யாருடன் சமந்தா இவ்வளவு க்ளோஸாக இருக்கிறார்? ஒரு வேலை புது பாய் பிரண்டா இருப்பாரோ என சந்தேகித்து வருகின்றனர்.

நோயால் அவதிப்பட்ட சமந்தா..

ஒருபுறம் இப்படியான பேச்சுக்கள் இருக்க, இன்னொரு புறம், சமந்தா நேர்காணலில் பேசிய ஒரு விஷயமும் மக்கள் கவனத்தை பெற்று வருகிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மயோசிட்டிஸ் நோயால் தான் எதிர்கொண்ட மற்றொரு நோயை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘மயோசிட்டிஸ் நோயால் நான் பல விஷயங்களை மறந்துவிட்டேன், ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டடேன்’ என்று கூறினார்.

மயோசிட்டிஸ் நோயினால். இவருக்கு முக்கியமாக ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது. என்ன தான் இவர் பெரிய செலிபிரிட்டி ஆக இருந்தாலும், இவரை தனிமை ஒரு புறம் வாட்டி வதைக்கிறது. மேலும், இவருக்கு இந்த நோய் ஏற்பட்டது முதல், இன்று வரை எல்லா டிரீட்மென்ட்டுக்கும், இவர் தனியாகவே தான் போய் வந்துள்ளார்.

இன்று வரை, இவரை யாரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இவர் கூட நேரம் செலவழித்து பார்த்துக்கொண்டதில்லை என்றும் கூறி இருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததோடு வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் என்ன தான் புகழின் உச்சியில் இருந்தும், இவர் நிலையை நினைத்தால் பரிதாபமாக தான் இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.