வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமுத்திரக்கனி மிரட்டிய 5 நெகடிவ் கதாபாத்திரங்கள்.. வில்லன்களுக்கு டப் கொடுத்த அப்பால நாயுடு

சமுத்திரக்கனி இயக்குனர், நடிகர், நாடக இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவர். அரசி, தங்கவேட்டை போன்ற தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை இயக்கி கொண்டிருந்த சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனர் ஆனார். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்த இவர், சுப்ரமணியபுரம் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமுத்திரக்கனி இப்போது நெகடிவ் கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார். சமுத்திரக்கனி மிரட்டிய 5 நெகடிவ் கதாபாத்திரங்கள்

ரஜினி முருகன்: 2016 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்த திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சமுத்திரக்கனி ஏழரை மூக்கன் என்னும் நெகடிவ் கேரக்டரில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

Also Read: 5 லட்ச சேமிப்பை மொத்தமாக வாரிக் கொடுத்த சமுத்திரக்கனி.. 2 வருடமாக குடும்பத்தையே திரும்பிப் பார்க்கல

மாஸ் என்கிற மாசிலாமணி: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் மாஸ் என்கிற மாசிலாமணி. இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சமுத்திரக்கனி ராதாகிருஷ்ணன் என்னும் கேரக்டரில் மெயின் வில்லனாக நடித்திருந்தார்.

வடசென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் நடித்திருந்தனர். வடசென்னை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்துக் கூறிய இந்த படத்தில் சமுத்திரக்கனி மெயின் வில்லனாக நடிப்பில் கலக்கி இருந்தார்.

Also Read: வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

வைகுந்தபுரம்: 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் வைகுந்தபுரம். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த தெலுங்கு படத்தில் சமுத்திரக்கனி அப்பால நாயுடு என்னும் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

நிமிர்: பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், மகேந்திரன்,பார்வதி நாயர் ஆகியோர் நடித்த திரைப்படம் நிமிர். மகேஷிண்டே பிரதிகாரம் என்னும் மலையாள திரைப்படத்தின் தழுவலாக வந்தது. இந்த படத்தில் வெள்ளையப்பன் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

Also Read: மனதைத் தொட்டும் வரவேற்பே இல்லாத 5 படங்கள்.. சமுத்திரக்கனி செதுக்கியும் பயனில்லை

Trending News