செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஹீரோ வேண்டாம் காமெடியை கையில் எடுத்த சந்தானம்.. கூட்டணி போட போகும் 3 டாப் ஹீரோக்கள்

Comedian Santhanam: தன் திறமையை வெளிக்காட்டி சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று அதன் பின், தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். அதைத்தொடர்ந்து ஹீரோவாய் களம் இறங்கிய இவர் தற்பொழுது வேறு பரிமாணத்தில் கம் பேக் எடுக்க போகும் தகவலை பற்றி இங்கு காண்போம்.

லொள்ளு சபா மூலம் தன் நகைச்சுவைக்கு அடித்தளம் போட்ட இவர் வெள்ளி திரையில் மன்மதன் படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருதை பெற்றார்.

Also Read: 2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

அவ்வாறு இருக்க, தன் அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்ட இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் பிடிவாதமாக, நடித்தால் ஹீரோவா தான் நடிப்பேன் என இவர் மேற்கொண்ட சொந்த தயாரிப்பு படங்களும் இவருக்கு வெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அவ்வாறு தொடர் தோல்வியை சந்தித்து வரும் இவர் இனி தல எடுக்க முடியாத நிலையில், மீண்டும் விட்ட இடத்தில் பிடிக்க துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்க முடிவெடுத்துள்ளார். அதை குறித்து தற்போது இன்டர்வியூ ஒன்றில் பேசிய இவர் கம் பேக் எடுக்கப் போவது போல பேசப்பட்டு வருகிறது.

Also Read: சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்

அதைத்தொடர்ந்து நானும், கார்த்திக்கும் மேற்கொண்ட காட்டுப்பூச்சி நகைச்சுவை நல்ல வரவேற்பு பெற்றது. அதை மீண்டும் தொடரலாமா என்று கார்த்தி தன்னை அழைப்பதாகவும் கூறினார். மேலும் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியவர் தான் ராஜேஷ். இப்படத்தில் பிரபலங்களுடன் இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அதைத்தொடர்ந்து மீண்டும், சந்தானத்தின் கம் பேக்காய் பாஸ் என்கிற பாஸ்கரன் பார்ட் 2 காண கதையை இயக்குனர் ராஜேஷ் மேற்கொண்டு வருகிறாராம். மேலும் அஜித், சிம்பு, கார்த்தி படங்களில் துணை நடிகராக மேற்கொள்ள போவதாக கூறினார். இப்படத்தின் மூலம் மீண்டும் இவர் தன் கேரியரை தொடங்குவார் என சினிமா வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

Trending News