புதன்கிழமை, ஜனவரி 29, 2025

தம்பி விளையாட்டா சொன்னத மொத்தமா நம்பிய சீமான் அண்ணன்.. முழு முக்காடு போட்டுட்டு ஓடிய சிம்பு

Actor Seeman: 2008 ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான படம் வாழ்த்துக்கள், இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. இதற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால் படங்களை இயக்குவதை தவிர்த்து வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து படம் இயக்க சீமன் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப் போவதாகவும் சொல்லப்பட்டது, ஆனால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. சிம்பு தற்போது மாநாடு, வெந்து துணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஓபன் நாளில் பட்டைய கிளப்பிய 7 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய துணிவு

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு மேடையில் சீமான், ‘நான் சிம்புவிடம் டேட் கேட்டிருக்கிறேன், சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போகிறேன்’ என்று கூறியிருந்தார். சிம்புவும் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் சீமானிடம் பார்ப்போம் என்று ஒரு வார்த்தையை போட்டு இருந்தார்.

சிம்பு மீது அப்பொழுது ஏகப்பட்ட புகார்கள். யாருமே படம் கொடுக்க முன்வரவில்லை, ஒழுங்கா படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் என அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அடுக்கடுக்காக முன்வைத்தனர். அந்த காலகட்டத்தில் சீமானிடம் படம் பண்ணலாம் என ஏதோ சொல்லி இருக்கிறார் சிம்பு.

Also Read: மலேசியாவில் மையம் கொண்டுள்ள சிம்பு, சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணமாம்

அதையே பிடித்துக் கொண்டு இருந்த சீமானுக்கு இப்பொழுது ஏமாற்றமே மிஞ்சியது. சிம்பு இப்போ இருக்கிற பிசி செட்யூலில் சீமானை கழட்டி விட்டு வருகிறார். விளையாட்டா சொன்னத நம்பிடீங்க என்ற வடிவேலு வசனம் தான் இப்பொழுது சிம்பு கூறி முக்காடு போட்டு எஸ்கேப்பாக வேண்டும்.

தற்போது சிம்பு கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் கமிட் ஆகி அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் சிம்புவுக்கு குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிம்பு சீமானுக்கு கொடுத்த வாக்கை காற்றோடு பறக்க விட்டார்.

Also Read: ரெட் கார்ட்டுக்கு பயந்து இறங்கி வந்த சிம்பு.. சாமர்த்தியமாய் பணிய வைத்த தயாரிப்பாளர்

Trending News