வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தியேட்டரை கண்ணீரால் மிதக்க வைத்த 5 படங்கள்.. அப்பா, மகள் பாசத்தில் பின்னிய கமல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களை தியேட்டரில் கதற கதற  அழவைத்த கதைகள் நிறைய உள்ளது. அதில் தற்போது வரை ரசிகர் மனதில் நீங்காத 5 படங்களை பற்றி பார்க்கலாம். அதுவும் தந்தை மகளுக்குமான பாசத்தினால் வெளிவந்த படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

மகாநதி: சந்தானபாரதி இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாநதி. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காணாமல் போன தான் மகளை தேடும் அப்பாவாக கமலஹாசன் நடித்திருப்பார். கமலஹாசன் நடித்த பல காட்சிகளும் கண்கலங்க வைக்கும் காட்சிகளாக அமைந்திருக்கும்,  இளையராஜாவின் இசையில் வெளியான இந்த இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

அஞ்சலி: இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் நடிகர் ரகுவரன், ரேவதி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் அஞ்சலி. 1990ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு‌ இளையராஜா இசை அமைத்திருப்பார். அஞ்சலி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாக நடித்திருப்பார் ரேவதி. அம்மா என்று கூப்பிடு என ரேவதி அந்த படம் முழுவதும் கூறிக் கொண்டே இருப்பார். ஆனால் அந்த குழந்தையோ தான் இறக்கும் தருவாயில் அம்மா என்று கூப்பிட்டு இறந்துவிடும். இந்த காட்சி காண்போரின் கண்களில் இன்றளவும் கண்ணீர் வழிந்தோடும். இப்படிப்பட்ட வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடிகை ஷாமிலி நடித்திருப்பார். இந்த படத்திற்காக நடிகை ஷாம்லி தேசிய விருதும் பெற்றார்.

அன்பே சிவம்: 2003ஆம் ஆண்டு சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். இந்த திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் கமலஹாசன் ஒரு சமுக போராளியாக இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு விபத்தால் தன்னுடைய உருவமே சிதைந்த நிலையிலும் முகத்தில் புன்னகையோடு இந்த படத்தில் அழகாக நடித்திருப்பார். கமலஹாசனுடன் பயணிக்கும் மாதவனுக்கு அன்பு மனிதநேயம் தான் எல்லாமே அதுதான் அன்பே சிவமென்று என்ற வசனத்தை திரைப்படத்தில் உணர்த்தி இருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் காதலி கிரண் நன்றாக வாழட்டும் என்று கூறும் வகையில் கமல்ஹாசனின் புன்னகை அமைந்திருக்கும், இந்த காட்சியில் கண்கலங்க வைத்திருப்பார் சுந்தர் சி.

7 ஜி ரெயின்போ காலனி: 2004ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தில் ஊரை சுற்றும் காதலனை பொறுப்பாக மாற்றும் காதலியாக சோனியா அகர்வால் மிகவும் அழகாக நடித்திருப்பார். அப்படிப்பட்ட காதலி ஒரு நாள் விபத்தில் இறந்துவிட அந்த விபத்தை நேரில் கண்ட காதலன் காதலி இறந்ததை தாங்கமுடியாமல், அவள் இறந்த போது படுத்த பாய் தலைகாணியை எடுத்து ஓடும் காட்சிகளில் செல்வராகவன் கண்ணீர் வரவழைத்திருப்பார். ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடல் இன் மூலமாகவும் ரசிகர்களை கண்ணீர் கடலில் யுவன் சங்கர் ராஜா அழ வைத்திருப்பார். செல்வராகவன் இயக்கத்தில் மிக முக்கியமான படமாக 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படம் என்றும் ரசிகர்களின்‌ மனதில் நிலைத்திருக்கும்.

அபியும் நானும்: பிரகாஷ்ராஜ் தந்தையாகவும் நடிகை திரிஷா மகளாகவும் நடித்து அசத்தியிருப்பார். தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் பாசத்தை அழகாகவும், தெளிவாகவும் இயக்குனர் ராதாமோகன் இயக்கி இருப்பார். இந்த படத்தின் இசை அமைந்த வித்யாசாகரின் இசையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வா வா என் தேவதை’ பாடல் மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகள் திருமணமாகி தன் கணவனோடு ஏர்போர்ட்டில் செல்லும்போது தந்தை அவளை ஒரு பார்வையாக பார்க்கிறார். அப்போது மகளின் கண்களில் வழிந்த கண்ணீரை விட தந்தையின் கண்களில் வழிந்த இன்பமான கண்ணீர் பார்க்கும் அனைவருக்கும் கண்களில் நீர் பெருகும். மொத்தத்தில் அபியும் நானும் திரைப்படம் ஒரு அழகான தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது.

Trending News