சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய் டிவியின் அராத்து நடிகையை தட்டி தூக்கிய ஜீ தமிழ்.. இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது

Serial Actress: என்டர்டைன்மென்ட் என்றாலே அது விஜய் டிவி தான். அந்த அளவிற்கு தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, மகாநதி போன்ற சீரியல்கள் எல்லாம் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியல் ஆகிவிட்டது.

மேலும் மகாநதி சீரியலில் காவேரி என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகை லட்சுமி பிரியாவிற்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உள்ளனர். இவர் இந்த சீரியலில் ரொம்பவே துருதுருன்னு நடிப்பார். வழக்கமாக சீரியலில் இருக்கும் நடிகைகள் செம ஸ்டைலிஷ் ஆகவும், ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவார்கள். ஆனால் இவர் சீரியலில் செய்யும் சுட்டித்தனத்தால் அவரை ஒரு அராத்து நடிகையாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

இந்த சீரியலில் தந்தையை இழந்து நான்கு மகள்கள் வாழ்க்கையில், எல்லா கஷ்டத்தையும் தாண்டி எப்படி முன்னேறுகின்றனர் என்பதைக் காட்டுகின்றனர். தன்னுடைய குடும்பத்திற்கு தந்தை இல்லாத கவலையை போக்க வேண்டும் என்பதற்காகவே காவேரி எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் சீரியலை ரொம்பவே சுவாரசியமாக்குகிறது.

Also Read: முத்து மீது ரோகினிக்கு ஏற்பட்ட சந்தேகம்.. உண்மையை கண்டுபிடிக்க போகும் மீனா

சீரியலில் இருந்து திடீரென்று விலகிய நடிகை

மகாநதி சீரியல் பிரபலம் லட்சுமி பிரியா சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் ட்ரிப், பன்னிக்குட்டி, சாலை, வழிபாட்டு முறை, பயணம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் சாய்ந்து விட்டார். இவர் மகாநதி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாளத்தில் சந்திரகாந்தம் என்ற சீரியலில் நந்தா கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் திடீரென்று அந்த சீரியல் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு பதில் அந்த புதிய நந்தா கேரக்டரில் சீரியல் நடிகை மான்சி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல விஜய் டிவியில் நிறைவடைந்த அன்புடன் குஷி என்ற சீரியலிலும் நடிகை மான்சி நடித்திருக்கிறார்.

ஆனால் நடிகை லட்சுமி பிரியா எதற்காக திடீரென்று சந்திரகாந்தம் என்ற பிரபலமான சீரியலில் இருந்து விலகினார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அவர் புதிதாக ஜீ தமிழில் ஒரு சீரியலில் கமிட்டாக இருக்கிறார். அவருக்கு தமிழில் நிறைய ஃபேன்ஸ் இருப்பதால் மலையாள சீரியலுக்கு முழுக்க போட்டு விட்டார். இருந்தாலும் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றதா! என்று காவிரியை நெட்டிசன்கள் வசைபாடுகின்றனர்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களுக்கு நடு ரோட்டில் கிடைத்த டோஸ்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோமதி

Trending News