Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இவ்வளவு ரணகளத்திலும் அசராம ரூட்டடிக்கும் ஷங்கர்.. விடாப்பிடியாய் மறுத்து வெளிவந்த கமல்

இவ்வளவு ரணகளத்திலும் அசராம ரூட்டடிக்கும் ஷங்கர்.. விடாப்பிடியாய் மறுத்து வெளிவந்த கமல்

தக்லைஃப் படம் நாளை கர்நாடகாவில் ரிலீசாகாது என்பது 90 சதவீதம் நிரூபணம் ஆகிவிட்டது. கமல் கொஞ்சம் கூட இறங்கி வருவதாக தெரியவில்லை. சுமார் 10 முதல் 20 கோடிகள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று விடாப்பிடியாய் நிற்கிறார் ஆண்டவர். […]

தக்லைஃப் படம் நாளை கர்நாடகாவில் ரிலீசாகாது என்பது 90 சதவீதம் நிரூபணம் ஆகிவிட்டது. கமல் கொஞ்சம் கூட இறங்கி வருவதாக தெரியவில்லை. சுமார் 10 முதல் 20 கோடிகள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று விடாப்பிடியாய் நிற்கிறார் ஆண்டவர்.

கர்நாடகாவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மன்னிப்பு கேட்பதால் ஒன்றும் ஆகி விடாது. நீங்கள் 10 முதல் 20 கோடிகள் இங்கே வியாபாரம் செய்ய போகிறீர்கள், மொழிகளைப் பற்றி தெரிந்த பெரிய வல்லுனர்கள் மாதிரி பேசி விட்டீர்கள் என்பது தான் கர்நாடகா நீதிமன்றத்தின் தீர்ப்பு.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தக்லைஃப் படப்பிரச்சனையில் இருந்து வெளிவந்து விட்டார் கமல். அடுத்தடுத்த பிராஜெக்ட் வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார். அடுத்தபடியாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கப் போகும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இதன் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளனர்.

அன்பறிவு மாஸ்டர்கள் இயக்க போகும் அந்த படம் சத்தியமங்கலம் காடுகளில் சூட்டிங் நடைபெற உள்ளது. பெரும்பாலும் ஆக்சன் கலந்த கதை தான் இவர்கள் எடுக்கப் போகும் இந்த படம். இதில் கமல் தோற்றமே சற்று மாறுபட்டு காட்டுவாசி மனிதர்கள் போல் இருக்குமாம்.

இந்த ரணகளத்திலும் இயக்குனர் ஷங்கருக்கு, கமலை வைத்து 80 சதவீதம் முடித்துள்ள இந்தியன் 3 படத்தை பற்றிய கவலை வந்துள்ளது. ஆனால் கமல் அதை பிடி கொடுப்பதாக தெரியவில்லை. சரியான நேரம் அமையும் போது அதைப்பற்றி பேச்சு வார்த்தை நடத்தலாம் என சங்கரை ஆஃப் பண்ணி வைத்துள்ளார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.