Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Padai thalaivan collection : விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசை அமைத்திருந்தார்.  […]

Padai thalaivan collection : விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசை அமைத்திருந்தார். 

படைத்தலைவன் கதை யானை மீது வேலு குடும்பம் மிகுந்த பாசம் வைத்து வளர்கின்றனர். ஆனால் கடன் நெருக்கடியால் அந்த யானையை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். அதனால் என்னென்ன சிக்கலை சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. 

அதோடு இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். ரமணா படத்தின் கெட்டபில் விஜயகாந்தையை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது படைதலைவன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.

சண்முக பாண்டியன் படை தலைவன் முதல் நாள் கலெக்ஷன் 

அதாவது வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட 50 லட்சம் வசூலித்திருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதுவே சமீபத்தில் வெளியான தக் லைஃப் படம் நேற்றைய தினம் கிட்டத்தட்ட 60 லட்சம் வசூலை பெற்றிருந்தது.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியான தக் லைஃப் படம் இவ்வளவு குறைவான வசூலை பெற்றிருக்கிறது. ஆனால் படை தலைவன் முதல் நாளே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கலெக்ஷனை அள்ளி இருக்கிறது. 

அதோடு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என படக்குழு நம்புகிறது. விஜயகாந்தின் வாரிசு என்பதை தனது நடிப்பின் மூலம் இந்த படத்தில் சண்முக பாண்டியன் நிருபித்து இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.