வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வில்லனாக நடிக்கும் சிம்பு.. வம்பு பண்ணாம இருந்தா சரிதான்

Actor Simbu : சிம்பு சினிமாவில் தொடர்ந்து பிளாப் படம் கொடுத்து வந்த நிலையில் இப்போது அவருக்கு ஏறுமுகம் தான். மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு என அவரது சினிமா கிராஃப் ஏற்றத்தில் தான் இருக்கிறது. இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தில் மூலம் தான் தயாரித்து வருகிறார். நேற்றைய தினம் சிம்புவின் பிறந்தநாள் முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு வேடங்களில் இருக்கும் போஸ்டர் வெளியானது.

அதாவது ஏற்கனவே மன்மதன் படத்தில் சிம்பு ஹீரோ, வில்லன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் தான் தேசிங்கு பெரியசாமி படத்திலும் ஹீரோ, வில்லன் என்று இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படம் சிம்புவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைய உள்ளது.

Also Read : சிம்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு போன 5 படங்கள்.. சீனா தானாவ அடித்து துவட்டிய தொட்டி ஜெயா

அதோடு மட்டுமல்லாமல் கமலின் படங்கள் எவ்வாறு சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லுமோ அதே போல் இந்த படமும் தமிழ் சினிமாவை அடுத்த தரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது. இது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே தெரிய வந்திருக்கிறது.

சிம்பு மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பிரச்சனை வருவது ஒவ்வொரு படத்திற்கும் நடந்து வருகிறது. அவ்வாறு சிம்பு மட்டும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருந்தால் கண்டிப்பாக சிம்புவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த படம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

Also Read : முரட்டு சிங்கிள் சிம்புவுக்கு 41 வயசு ஆயிடுச்சா.! ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் சொத்து மதிப்பு

Trending News