மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இப்பொழுது படத்தின் ரிலீஸுக்காக பட குழு காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் தான் கார்த்தி நடித்து முடித்துள்ள விருமன் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அந்த வகையில் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் அதே ஆகஸ்ட் மாதம் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக விருமன் திரைப்படமும் வருகிறது.
இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பட குழு ஒத்திவைத்து விட்டது. இதற்கு காரணம் இந்த இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கிறது. இதனால்தான் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவர முடியாமல் இருக்கிறது.
ஏனென்றால் ஒரு படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து தான் அதை ஓடிடி தளத்தில் வெளியிட முடியும். அதனால் சிம்பு, கார்த்தி இருவரின் திரைப்படங்களும் ஒரே மாதத்தில் வெளியானால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு சில தடைகள் ஏற்படும்.
இதை மனதில் வைத்து தான் அமேசான் நிறுவனம் அவர்கள் இருவரின் படங்களையும் ஒரு மாத இடைவெளியில் ரிலீஸ் செய்ய சொல்லி கறாராக கூறி விட்டார்களாம். இதனால் தற்போது இருவரின் திரைப்படங்களும் வெளிவருவதில் ஏகப்பட்ட குழப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த அளவுக்கு பட குழுவினரை அமேசான் நிறுவனம் சுத்தலில் விட்டு விட்டது.