ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குறுக்கு வழியில் புத்தியை தீட்டும் சிம்பு!கமலை நம்பினால் மூளை மழுங்கிடும்  தொடங்கிய ஆரம்பபுள்ளி!

Simbu asked the producer if he could make the film before STR 48: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சிம்பு, தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் சிறிது காலம் சினிமாவை விட்டே விலகி இருந்தார் என கூறலாம். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திற்கு பின் கம்பேக் கொடுத்த சிம்பு தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களின் மூலம் வெற்றியை நோக்கி பயணமானார்

விரல் மூலம் வித்தை காட்டி வாய்ப்பேச்சில் வீரனாக இருக்கும் சிம்பு கடந்த ஆண்டு வெளியான பத்து தல படத்திற்கு பின் பட வாய்ப்புகள் வந்த போதும் அதை நிராகரித்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தையே பெரிதாக நம்பி காலத்தை கழித்து விட்டார்.

STR 48 சரித்திரத்தை பின்புலமாக கொண்ட தனித்துவமான கதையில் இளவரசனாகவும் நெகட்டிவ்  ரோல் என இரு  வேறு தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு  பாகுபலி போன்ற போர்க்காட்சிகள் நிறைந்த சிம்பு இளவரசர் கெட்டப்பில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

Also read: கௌதம் மேனன் நினைச்சாலும் திரும்பி எடுக்க முடியாத 5 படங்கள்.. அப்பாஸ் கேட்டும் மறுத்த ஸ்டைலிஷ் இயக்குனர்

இதனை அறிந்த ரசிகர்கள் STR 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் போலும் என ஆர்வத்துடன் இதனை கண்டு களித்தனர். பார்த்தால் இது தனியார் நிறுவனத்திற்காக சிம்பு நடித்த விளம்பரபடம் என்பது பின்னர் தான் தெரிந்தது. அப்பொழுது STR48 என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தமிழ் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டோடு உருவாக உள்ள படம் என்ற பெருமையைப் பெற்ற STR 48 அறிவிப்பு விட்டு போஸ்டர் போட்டதோடு சரி அதற்குப்பின் எந்த ஒரு வேலைகளும் நடைபெறாமல் பேச்சுவார்த்தையிலே போய்க் கொண்டிருப்பதால் கடுப்பான சிம்பு அடுத்தகட்ட திட்டத்தை சத்தம் இல்லாமல்  அரங்கேற்றி வருகிறார்.

தனக்கு பின் வந்தவர்கள் முன்னேறி பிசியாக இருக்கும் நிலையில் தன்னை வேலைக்கு ஆகாதவன் என்று நினைத்து விடுவார்களோ என பயந்து இதற்கு முன் பணியாற்றிய ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடம் போய் நான் ஃப்ரீயா இருக்கிறேன் கால்ஷீட் தாரேன் படம் பண்ணலாமா என தூது விடுகிறாராம். ஏற்கனவே முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் இவரிடம் ஏமாந்த  கதையை அறிந்த மற்றவர்கள் இவரை நம்ப பயப்படுகிறார்களாம். விதி வலியது!

Also read: சரக்கு ஊத்தி கொடுத்து வாய்ப்பு கேட்கும் சிம்பு பட நடிகை.. கைகழுவி விட்ட இயக்குனர்கள்

Trending News