புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கமல் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு?. வாரிசு நடிகரை லாக் செய்த உலகநாயகன்

Actor Simbu: பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு தன்னுடைய 48வது படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் தயாராகி இருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கவும் சென்றிருந்தார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, கமல் தயாரிக்கிறார்.

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படம் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாக உள்ளது. விரைவில் ஷூட்டிங்கை துவங்க உள்ளார். இந்நிலையில் கமலை வைத்து மணிரத்தினம் இயக்கும் படத்தில் கமலுடன், சிம்பு நடிப்பதாக இருந்தது.

Also Read: சிம்பு கைவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பெண் பித்து பிடித்து ஆட்டிய கெட்ட நேரத்தில் தட்டி தூக்கிய தனுஷ்

ஆனால் அவர் STR 48 படத்தில் நடிக்க இருப்பதால் இதற்கு கால் சீட் கொடுக்க முடியவில்லை. அந்த படத்தில் சிம்புவுக்கு பதில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சூர்யா அல்லது விக்ரம் நடிப்பதாக சொல்லப்பட்டது.

கடைசியில் விக்ரம் தான் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளிவந்தது. இப்போது அந்த செய்தியும் பொய்யானது. சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்திற்கு தற்பொழுது வாரிசு நடிகரை தான் உலக நாயகன் லாக் செய்திருக்கிறார்.

Also Read: இந்த ரெண்டு விஷயங்களால் சிம்பு பரம எதிரியாக நினைக்கும் ஹீரோ.. நயன்தாராவுடன் சேரவிடாமல் தடுத்த விஷப்பூச்சி

இந்தப் படத்தில் சிம்புவுக்கு பதில் துல்கர் சல்மான் தேர்வாகி உள்ளார். அதை போல் இந்த படத்தில் ஜெயம் ரவியும் இருக்கிறார். மணிரத்தினம் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி இருந்தால் அதில் சிம்பு நடிப்பதாக வந்தாலும் கடைசியில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த படமும் நடிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து திரையில் பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர். இருப்பினும் சிம்பு இந்த நல்ல வாய்ப்பை கை நழுவ விட்டதால், அது துல்கர் சல்மானுக்கு அடித்த ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.

Also Read: சைரன் படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம்.. தனி ஒருவன் போல் வெற்றிக்காக எடுத்த அதிரடி முடிவு

Trending News