வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

100 கோடி பட்ஜெட்டில் தளபதி 68க்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு.. இணையத்தில் பற்றி எரியும் புகைப்படம்

கடந்த சில நாட்களாகவே இணையத்தை அதகலப்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் தளபதி 68 படத்தின் அப்டேட் தான். அஜித்துக்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய் உடன் கூட்டணி போட்டுள்ளார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி நிலையில் தளபதி 68 படத்திற்கு போட்டியாக எஸ்டிஆர் 48 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது உலக நாயகன் கமலஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க இருக்கிறார்.

Also Read : தளபதி 68 மல்டி ஸ்டார் படமா? விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு

இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். மேலும் இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஒரு கதை தயார் செய்த நிலையில், அந்தக் கூட்டணி அமையாததால் அதே கதையில் சில மாறுதல்களுடன் சிம்புவை வைத்து இயக்க உள்ளார். மேலும் இது போர்க்கால கதை அம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட உள்ளது.

உலகநாயகனுடன் சிம்பு

simbu-kamal

Also Read : விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

இதற்காக சிம்பு லண்டன் சென்று சில பயிற்சிகளும் மேற்கொண்ட உள்ளார். அதுமட்டுமின்றி அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. எஸ்டிஆர் 48 படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி போடும் சிம்பு

str-48

இந்நிலையில் எஸ்டிஆர் 48 படக்குழு கமலை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் காட்டுத் தீயை போல் இணைய முழுக்க இந்தப் புகைப்படங்கள் பரவி கிடக்கிறது. தளபதிக்கு போட்டியாக சிம்பு வந்துவிட்டார் என அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்த வருகிறார்கள்.

எஸ்டிஆர் 48 கூட்டணி

str-48

Also Read : சிம்புவை கை தூக்கிவிடும் ஆண்டவர்.. வளர்ச்சியை தாங்க முடியாமல் கெடுக்கும் சோழர்கள்

Trending News