Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்கிட்டயும் பெட்டி பெட்டியாய் பணம் இருக்கு.. பழைய காதலிக்கு ஆப்பு அடிக்கும் சிம்பு

என்கிட்டயும் பெட்டி பெட்டியாய் பணம் இருக்கு.. பழைய காதலிக்கு ஆப்பு அடிக்கும் சிம்பு

கையில் பணம் இருக்கும் போதே அதை உபயோகித்துக் கொள்ளும் விதமாக செயல்பட வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற ஒரு பழமொழி உண்டு. இப்பொழுது சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே அதில் சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத்தில் பயன்படும் விதமாக […]

கையில் பணம் இருக்கும் போதே அதை உபயோகித்துக் கொள்ளும் விதமாக செயல்பட வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற ஒரு பழமொழி உண்டு. இப்பொழுது சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே அதில் சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத்தில் பயன்படும் விதமாக ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து கொள்கின்றனர் நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். தான் சம்பாதிக்கும் பணத்தை ஏற்கனவே நயன்தாரா பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

நயன்தாரா மட்டுமின்றி அனைத்து சினிமா ஹீரோக்களும் ஹீரோயின்களும் ரியல் எஸ்டேட், விவசாயம், ஹோட்டல், சுற்றுலாத்தலம் போன்றவற்றில் முதலீடு செய்து அவர்களது எதிர்காலத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ‘தி லிப் பாம்’ என்ற அழகு சாதன பொருட்கள் கம்பெனியைத் தொடங்கினார். இதுதவிர துபாயில் மசாலா கம்பெனி மற்றும் ஆயில் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார். இப்பொழுது நயன்தாராவை போல் துபாயில் தொழில் தொடங்கும் முனைப்பில் இருக்கிறார் சிம்பு.

துபாயில் தற்போது நண்பர்களை நேரில் அழைத்துப் பேசி, அடுத்த பிசினஸ் என்ன செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்து வருகிறாராம் சிம்பு. இதற்காக துபாய் கிளம்பிய நடிகர் சிம்பு, அதை முடித்து விட்டு வரும் மே இரண்டாம் தேதி சிம்பு சென்னை திரும்புகிறார். சி

சிம்பு முதன்முதலாக காதலித்த பெண் நயன்தாரா. வருகின்ற ஜூன் மாதத்தில் நயன்தாரா தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இந்நிலையில் நயன்தாராவிற்கு போட்டியாக அவருடைய தொழிலுக்கே ஆப்பு வைக்கும் வகையில் தொழில் தொடங்குகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.