வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

47 படம் நடிச்சும் பிரயோஜனம் இல்ல.. குழந்தையிலிருந்து நடித்து 6 ஹிட் மட்டுமே கொடுத்த சிம்பு

பல திறமைகளை கொண்டு திகழும் டி ராஜேந்தரின் வாரிசான சிம்பு குழந்தையாக இருக்கும்போதே சினிமாவிற்கு வந்தவர். உறவைக்காத்த கிளி என்ற படத்தில் அறிமுகமான இவருக்கு அப்போது ஒரு வயது தான். அதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த இவர் இதுவரை 47 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் படியான வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமல்லாமல் இவருடைய படங்களில் கதை சிறப்பாக இல்லை என்றாலும் பாட்டு, நடனம் ரசிகர்களை கவர்ந்து விடும்.

Also read: அந்த நடிகைக்காக தலைகீழாக நிற்கும் சிம்பு.. ஹீரோயின் தேடும் படலத்தில் இறங்கிய கமல்

அதை வைத்து சில படங்கள் சுமாரான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் சிம்பு இதுவரை ஆறு வெற்றி திரைப்படங்களை தான் கொடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதன்படி கோவில், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் அவருக்கான வெற்றியாக அமைந்தது.

அதில் சில திரைப்படங்கள் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்று அவருடைய இமேஜை காப்பாற்றியது. ஆனால் ஒஸ்தி, போடா போடி போன்ற பல திரைப்படங்கள் அவருக்கு தோல்வியாக தான் அமைந்தது. அதனாலேயே சில வருடங்களுக்கு முன்பு வரை இவரை நம்பி படம் எடுப்பதற்கு பலரும் தயங்கி வந்தனர். ஆனால் இப்போது அப்படி கிடையாது.

Also read: சிம்புவுக்கு ஜோடியான வாரிசு நடிகை.. பக்கா காம்பினேஷனில் தயாராகும் படம்

அவர் தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் முன்னேறி கொண்டிருக்கிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இவருடைய 48வது படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. அதில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சிம்பு இதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பல தோல்விகளை கடந்து வந்திருக்கும் இவர் பலரையும் ஆச்சரியப்படுத்தி தான் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இவருடைய நிலைமையில் வேறு யாரும் இருந்தால் எப்போதோ சினிமாவை விட்டு சென்றிருப்பார்கள். ஆனால் இவர் தோல்வி படங்களை கொடுத்தும் எப்படியோ சமாளித்து முன்னணி நடிகராகவே தன்னை நிலை நிறுத்தியுள்ளார். இதற்கு அவருடைய ரசிகர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

Also read: 40 வருடமாக செய்யாத புது முயற்சியை கையில் எடுத்த சிம்பு.. STR 48 படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

Trending News