புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சிம்புவின் சவடாலாம் கமல் கிட்ட செல்லாது.. பூதாகரமாய் மாறிய சம்பவம்

Actor Kamal-simbu: கமலின் இந்தியன் 2 பிரம்மாண்டத்தை காண காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் இவர் தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிம்பு -கமல் இடையே பூதாகரமாய் மாறப்போகும் சம்பவத்தை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தற்பொழுது இந்தியன் 2 வில் நடிப்பை மேற்கொள்ளும் கமல், அடுத்து தெலுங்கு படமான ப்ராஜெக்ட் கேவில் நடிக்க உள்ளார். இதற்கிடையே தயாரிப்பையும் மேற்கொள்ளும் இவர் சிம்புவின் 48வது படத்தை உருவாக்க உள்ளார். சிம்புவின் வெற்றி படங்களைத் தொடர்ந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் சிம்பு நடிப்பில் ஆக்சன் படம் உருவாக உள்ளது.

Also Read: நல்லி எலும்பை கடிப்பது போல் ஹீரோயினை குதறிய ஹீரோ.. 6 மாசம் சினிமா பக்கம் தலை காட்டாத நடிகை

இம்மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிப்பு வந்தது. இதற்கிடையே சிம்பு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த பேச்சு வார்த்தை எதுவும் அவர் பேச முன் வராதா நிலையில் இருந்து வருகிறார். அவ்வாறு தன் ரீ என்ட்ரி படங்களான வெந்து தணிந்த காடு, மாநாடு வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது தன் சம்பளத்தையும் ஏற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து லலித் குமார் தன் தயாரிப்பை மேற்கொள்ளும் படத்திற்கு சிம்பு நடிக்க கால்ஷீட் கேட்டதாக கூறப்படுகிறது. இவர் இதுவரை தன் படத்திற்கு சம்பளமாக 20 முதல் 25 கோடி பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு 40 கோடி சம்பளத்தை கேட்டு வருகிறாராம்.

Also Read: ஹீரோக்களை ஓரம்கட்டிய சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

இவரின் இத்தகைய சம்பள உயர்வால், அப்படத்தின் கால்ஷீட் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலைமை கமல் படத்தில் வேலைக்காகாது, ஏனென்றால் கடைநிலை ஊழியரில் இருந்து, ஜூனியர் ஆர்டிஸ்ட் இருந்து பெரிய ஹீரோக்கள் வரை யார் மார்க்கெட் அதிகம், யார் என்ன சம்பளம் வாங்குகிறார், யாருக்கு என்ன வேல்யூ என்பதை அனைத்தையும் அப்டேட்டில் வைத்திருப்பவர் கமல்.

அவ்வாறு இருக்க இவர் கேட்கும் சம்பளத்தை உடனே ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. படத்தின் வெற்றி பொறுத்துதான் சம்பள உயர்வு எல்லாம் செல்லுபடி ஆகும். அது விஜய்யாக இருந்தாலும் சரி, ரஜினியாக இருந்தாலும் சரி அதுதான் நியாயமான ஒன்று. இது போன்ற காரணங்களால் தற்பொழுது இவர்கள் இருவர் இடையே இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது.

Also Read: 80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

Trending News