Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கவர்ச்சி காட்ட முடியாது என மறுக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வாய்ப்பு இல்லேன்னா வேற வழி இல்ல செல்லம்

கவர்ச்சி காட்ட முடியாது என மறுக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வாய்ப்பு இல்லேன்னா வேற வழி இல்ல செல்லம்

பெரிய பட வாய்ப்பு வந்தாலும் கவர்ச்சி படங்கள் என்றால் நிராகரிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.

குடும்ப குத்து விளக்காக ஒரு காலத்தில் நடித்த சில நடிகைகள் கூட தற்போது கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். ஏனென்றால் பட வாய்ப்புக்காக இவ்வாறு செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கவர்ச்சி இருந்தால் தான் மார்க்கெட் என்ற அளவுக்கு சினிமா தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இதில் விதிவிலக்காக சிலர் உள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் பட நடிகை கவர்ச்சி படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம். பல இயக்குனர்களும் அவரை நாடி எவ்வளவு வேணாலும் கொட்டித் தருகிறோம் என்று சொன்னாலும் எதற்கும் அசரவில்லையாம்.

அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்தவர் பிரியங்கா அருள் மோகன். இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை பிரியங்கா அருள் மோகன் ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது இயக்குனர்கள் சிலர் அவரிடம் படத்தில் சில கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதாவது படத்தில் முத்த காட்சி போன்ற சில விஷயங்கள் இருக்கும் என கூறியுள்ளார்கள்.

ஆனால் அதற்கு பிரியங்கா மோகன் மறுப்பு தெரிவித்து விட்டாராம். ஏனென்றால் கிளாமர் ரோலில் நடித்தால் பணம் கிடைக்கும் என்பது உண்மை தான், ஆனால் புகழ் கிடைக்காது. அதுமட்டுமின்றி கவர்ச்சி படங்களில் நடித்தால் சில காலம் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

அதுவே நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வந்தால் சினிமாவில் நீண்ட காலம் பயணிக்கலாம் என்று பிரியங்கா அருள் மோகன் கூறியுள்ளாராம். இதனால் பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நான் நடிப்பதில்லை என்று சொல்லிவிடுகிறாராம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.