செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை .. சிவகார்த்திகேயன் கையில் இருந்த படமும் நழுவியதா ? பரிதாபம்

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் சாதித்த ஒரு சாதனை நாயகன் என்று சொல்லலாம். இவருக்கு குழந்தைகள் மற்றும் பெண் ரசிகைகள் அதிகம். வெளிப்படையாக பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயன் ஒரு வெற்றி நாயகனாகவே சித்தரிக்கப்படுகிறார். ஆனால் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் பிரச்சனைகளோ அதிகம்.

ஆரம்ப கால கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியநாயகனாகவும் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாகவும் பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் உண்மை நிலைமை சீமராஜா திரைப்படத்தின் மூலம் தான் வெட்ட வெளிச்சமானது. அந்த ஒரு படம் தோல்வி அடைந்ததிலிருந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் அடிமேல் அடிதான் வாங்கினார்.

Also Read: ரெமோ சிவகார்த்திகேயன் போல புதிய வேடத்தில் யோகி பாபு.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போட்டோ

தோல்வி படங்களால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து படங்கள் நடித்து கொடுத்து அந்த படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து சிவகார்த்திகேயனின் சினிமா அந்தஸ்து அதல பாதாளத்திற்கும் கீழ் சென்றது. அதன் பின்னர் இவர் எழுந்து வருவது என்பதே ஒரு சந்தேகமாக தான் இருந்தது.

அப்படி போய்க் கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை தூக்கி நிறுத்தியது இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் தான். இதன் மூலம் சிவகார்த்திகேயன் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தார். டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் சிவகார்த்திகேயனை மீண்டும் உச்சிக்கு கொண்டு சென்றது.

Also Read: டாப் ஹீரோக்களின் மார்க்கெட்டை குறைக்கும் 3 இயக்குனர்கள்.. மீள முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்

இப்படி தொடர் வெற்றியை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்களின் பல்ஸை தவறாக புரிந்து கொண்டார். காமெடி இருந்தால் மட்டுமே போதும் என்று அவர் நினைத்த பிரின்ஸ் திரைப்படம் மொத்தமாக காலை வாரிவிட்டது. இதனால் ஓரளவுக்கு கடனை அடைத்து மேலே வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் கடன் தொல்லை அதிகமானது.

இதுவும் போதாது என்று சிவகார்த்திகேயன் ரொம்பவும் எதிர்பார்த்த படம் ஒன்று படப்பிடிப்பும் தொடங்காமல், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளிவராமல் இருக்கிறது. மேலும் இவர் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் ஒழுங்காக படபிடிப்பு நடக்காமல் இழுபறியில் இருக்கிறது. இதனால் சிவா இப்போது செய்வதறியாது மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயன் மாதிரி வளர முடியாமல் போன நண்பர்.. விஜய் டிவி கை கொடுத்தும் பிரயோஜனம் இல்லை

Trending News