திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் அடிச்ச அப்பாயின்மென்ட் ஆர்டர்.. 3 இயக்குனர்களை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் மாவீரன் மற்றும் அயலான் படங்களை வைத்துள்ளார். இந்த படங்களின் ரிலீஸுக்காக பெரிதும் சிவகார்த்திகேயன் காத்துக் கொண்டிருக்கிறார். அயலான் படம் பல வருடங்களாக உருவாகி வரும் நிலையில் எப்போது வெளியாகும் என நச்சரித்து வந்தனர்.

ஆகையால் இரண்டு படங்களையும் விரைவில் வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பம்பர் பரிசாக கமல் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது படத்தை ராஜ் கமல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் கூட்டணியை உறுதி செய்த கமல்.. இணையத்தில் காட்டுத் தீயாக பரவும் SK21 அறிவிப்பு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. கமல் பட வாய்ப்பு கிடைத்ததால் மூன்று இயக்கனர்களை அப்படியே டீலில் விட்டுள்ளார்.

அதாவது இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இவருடன் மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி போடுவதாக சிவகார்த்திகேயன் உறுதி அளித்தார். ஆனால் இப்போது அதிலிருந்து பின்வாங்கி விட்டாராம்.

Also Read : எங்கு சென்றாலும் துரத்தும் சிவகார்த்திகேயன்.. தனுஷை ஒரு கை பார்க்க பெரிய ஹீரோவின் வாழ்த்து

அடுத்ததாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுக்காக ஏற்கனவே ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் வெங்கட் பிரபு பெரும்பாலும் காமெடி படங்களை எடுப்பதால் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைந்தால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ஆனால் இப்போது வெங்கட் பிரபுவையும் கைகழுவி விட்டுள்ளாராம். கடைசியாக விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான ஏ ஆர் முருகதாஸும், சிவகார்த்திகேயனும் முதல் முறையாக கூட்டணி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இப்போது இவர்களையெல்லாம் விட்டுவிட்டு முதலில் கமல் தயாரிப்பில் நடிக்க காஷ்மீர் கிளம்பி உள்ளார் சிவகார்த்திகேயன்.

Also Read : சிவகார்த்திகேயன் ஜிம் பாட்னர் யார் தெரியுமா?. சந்தானம் பட நடிகை வெளியிட்ட வைரல் போட்டோ

Trending News