டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொள்கிறார் என்று பலரும் பேசி வந்தனர். இது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமாக வேறு ஒரு காரணம் இருக்கிறது.
அது என்னவென்றால் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட கடன் தொல்லைகள் இருக்கிறது. சமீபத்தில் டாக்டர் படத்தின் பைனான்சியர் பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி மாட்டிக் கொண்டார். அதுக்காக சிவகார்த்திகேயன் கையெழுத்துப் போட்டு கடனை சுமக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
அதனால்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் உஷாராக பல விஷயங்களை கையாள்கிறார். அதாவது அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அவருடைய 20வது திரைப்படத்தை ஆந்திராவில் இருக்கும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இது போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்துக் கொடுக்கும் பொழுது பைனான்ஸ் தொடர்பான எந்த பிரச்சனைகளும் ஹீரோவுக்கு இருக்காது. அதனால்தான் சிவகார்த்திகேயன் தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனமாக பார்த்து படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். ஆட்டோகிராப் மாதிரி எல்லா இடத்துலயும் கையெழுத்து போட்டா இப்படித்தான் சிக்கல்ல மாட்டிக்கணும்.