திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரிலீசுக்கு முன்பே 90 கோடி லாபம் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. சூர்யா, சிம்பு எல்லாம் ஓரமா போங்க

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளார். நடுவில் தொடர் சறுக்களை சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு தற்போது வெற்றிக்கு மேல் வெற்றி குவிந்து வருகிறது. நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அதிலும் தொடர்ந்து அவருடைய படங்கள் 100 கோடி வசூல் செய்து வசூல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

Also Read : 40 வயது இயக்குனரை வளைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. நடிகரின் அண்ணனுக்கு வீசிய வலை

இதில் பிரின்ஸ் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிரின்ஸ் படத்தின் வெளியீட்டுக்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரின்ஸ் படம் வெளியாவதற்கு முன்பாகவே சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் போன்றவை பல கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது 90 கோடிக்கு பிரின்ஸ் படம் பிசினஸ் செய்துள்ளது. இதனால் முன்னணி தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க ஆர்வமாக உள்ளனர்.

Also Read : தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் சூர்யா, சிம்பு படங்கள் கூட இந்த அளவுக்கு ரிலீசுக்கு முன்பு இவ்வளவு பிசினஸ் ஆனதில்லை. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார். இதற்கு காரணம் குடும்ப ஆடியன்ஸை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு மட்டுமே குடும்ப ஆடியன்ஸ் இருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளுக்கு வந்த பார்க்கிறார்கள். இதனால் சிவகார்த்திகேயன் படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

Also Read : ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

Trending News