புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

Siva Karthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. பிரின்ஸ் படத்தின் மூலம் கொஞ்சம் டல்லான சிவா, மாவீரனில் விட்ட இடத்தை பிடித்து விட்டார். இந்த படம் ஹிட்டுக்கு பிறகு அடுத்தடுத்து இவருக்கு படங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு புதிய காம்போவின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா தன்னுடைய அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. படத்திற்காக புதிய ஹேர் ஸ்டைல் என சொல்லி படத்திற்கு இன்னும் ஹைப் ஏத்தியிருக்கிறார் சிவா. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் SK21 என அடையாளப்படுத்தப்படுகிறது.

Also Read:ஒரே படத்தால் எல்லா கடனையும் அடைக்கும் நடிகர்.. பழைய படங்களை தூசி தட்டி வெளியிட காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்!

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் பொழுதே சிவாவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாசுடன் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடிக்க இருக்கிறார். அவருக்கான டெஸ்ட் சூட் நேற்று நடைபெற்றிருக்கிறது. மேலும் அடுத்த வாரத்தில் இந்த படத்தின் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிகர் துல்கர் சல்மான் உடன் நடித்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:நீ இன்னைக்கு வசூல்னா நாளைக்கு இன்னொருத்தன்.. தளபதியை வறுத்தெடுக்கும் தயாரிப்பாளர்

வழக்கம்போல சிவகார்த்திக்கேயன் நடிக்கும் இந்த படத்திலும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் – அனிருத் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் – அனிருத் கூட்டணி ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கூட்டணி தான். SK 21 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த பிறகு இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் முருகதாஸ் நடிகர் அஜித்குமாருக்கு தீனா, விஜய்க்கு துப்பாக்கி, சூர்யாவுக்கு கஜினி என பல ஹிட் படங்களை கொடுத்தவர். சில வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இந்த படம் சிவாவின் சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read:விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

Trending News