திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுசையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. டைட்டில் காப்பியில் இத்தனை படங்களா?

Dhanush – Sivakarthikeyan : தனுஷின் பட டைட்டில்களை எடுத்துக் கொண்டால் முன்பு உள்ள பழைய படங்களின் டைட்டிலாகத்தான் இருக்கும். அதுவும் குறிப்பாக ரஜினி படங்களின் டைட்டிலை தான் தனுஷ் குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தி வந்தார். படிக்காதவன், பொல்லாதவன் என ரஜினி பட டைட்டிலாக தான் இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக தனுஷையே மிஞ்சும் அளவிற்கு இப்போது சிவகார்த்திகேயன் தொடர்ந்து பழைய படங்களின் டைட்டிலை காப்பியடித்து வருகிறார். எதிர்நீச்சல் என்ற நாகேஷின் சூப்பர் ஹிட் படத்தை சிவகார்த்திகேயனின் காப்பியடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினி படத்தின் டைட்டில்களான வேலைக்காரன், மாவீரன் போன்ற படங்களில் டைட்டிலை தனது படத்திற்கு வைத்தார். அதேபோல் கமல் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தின் டைட்டிலையும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தி இருகிறார். பாலிவுட் பட டைட்டிலையும் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டது.

Also Read : நாட்டுக்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன்.. ராயல் சல்யூட் அடிக்கும் அமரன் சிவகார்த்திகேயன்

இதுவரை கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் சிவகார்த்திகேயன் மற்ற படங்களின் டைட்டிலை பயன்படுத்துகிறார். அந்த வகையில் இப்போது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 21வது படத்திற்கு அமரன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் ராணுவம் சார்ந்த கதையாக இருப்பதால் ஏற்கனவே சோல்ஜர், அமரன் போன்ற பெயர்கள் தான் இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 1992 ஆம் ஆண்டு அமரன் என்ற படம் வெளியாகி இருந்தது. இப்போது அந்த படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் கூட பிறந்த நாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. எல்லாமே விஜய் டிவி கண்டுபிடிப்பா இருக்கே!

Trending News