திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெற்றி, தோல்வியை தலைக்கு ஏற்றாத சிவகார்த்திகேயன்.. எதிர்பாராத கூட்டணியில் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் வசூல் ரீதியான மெகா ஹிட்டான டாக்டர், டான் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை பெரிதும் நம்பி இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஏமாற்றம் தான் தந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தின் தோல்வியை ரசிகர்கள் மறக்கும் அளவிற்கு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

Also Read : விலை போகாத படங்களை நேக்காக தள்ளிவிடும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தில் பலிக்காமல் போன பாட்சா

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை பற்றி பேசுகையில், வெற்றி தோல்வி இரண்டையுமே தலைக்கு எடுத்துச் செல்லாத நடிகர் சிவகார்த்திகேயன் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் எங்களது கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக சஸ்பென்சை உடைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பாணியில் அந்த படம் இல்லாமல் வேறு விதமாக கண்டிப்பாக நகைச்சுவையாகவும் இருக்கும் என வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்ட ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை கூறியிருந்தார்.

Also Read : பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்திற்கு என்ன ஆச்சு? பரிதவிக்கும் சிவகார்த்திகேயன்

ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புக்கு மாநாடு என்ற சூப்பர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்த நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்தப் படம் முடிந்த கையோடு சிவகார்த்திகேயனின் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம். சிம்புவின் கேரியரை தூக்கி விட்டது போல் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு தரமான படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read : நன்றி மறந்த சிவகார்த்திகேயன்.. வாய்ப்பு கொடுத்து கைபிடித்து தூக்கி விடும் விஜய் சேதுபதி

Trending News