திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நன்றி மறந்த சிவகார்த்திகேயன்.. வாய்ப்பு கொடுத்து கைபிடித்து தூக்கி விடும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்களில் சற்று வித்தியாசமானவர் தான் விஜய் சேதுபதி. தற்போது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால்யே இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அது மட்டுமல்லாமல் திறமையான இயக்குனரை வளர்த்து விடுவதிலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. அந்த வகையில் இவர் இரண்டு அடுத்தடுத்த தோல்வி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவருக்கு தயங்காமல் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்த திரைப்படங்கள் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்.

Also read : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தளபதி விஜய்.. சிவகார்த்திகேயன் பாடலை காப்பி அடித்து சிக்கிய ‘ரஞ்சிதமே’

இந்த படங்கள் தான் அவரை தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. ரசிகர்கள் மத்தியில் அவருக்கான இமேஜும் இந்த படங்களால் உயர்ந்தது. இந்த இரண்டு படங்களை இயக்கிய பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜா என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் முந்தைய இரண்டு படங்களை காட்டிலும் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு தோல்வி திரைப்படமாக அமைந்தது. அதனாலேயே அவர் இயக்குனர் பொன்ராமுக்கு அடுத்த வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இயக்குனரே வலிய போய் அவரிடம் வாய்ப்பு கேட்கும் கூட அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர் அடுத்ததாக சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான எம் ஜி ஆர் மகன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

Also read : புது அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.. தனுஷ், சிவகார்த்திகேயன் போல செய்யபோகும் வேலை

ஆனால் அவரின் போதாத காலம் அந்த திரைப்படமும் தோல்வியை தழுவியது. இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இவரை சிவகார்த்திகேயன் கண்டும் காணாமல் விட்டுவிட்டார். இப்படி நன்றி மறந்துவிட்டாரே என்று இவர் நொந்து போன வேலையில் தான் விஜய் சேதுபதி அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்த ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலக அளவில் வெளியாக இருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் போலீசாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஏனென்றால் இவர் ஏற்கனவே போலீசாக நடித்து வெளியான சேதுபதி திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதனால் இவரை மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

Trending News