வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்பு இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிவகார்த்திகேயன்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சிம்பு படத்தின் இயக்குனரை சிவகார்த்திகேயன் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read : ஸ்கூல் டீச்சராக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. ட்ரெண்டாகும் பிரின்ஸ் பட டிரெய்லர்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சிம்புக்கு மாநாடு என்ற சூப்பர் டூப்பர் ஹிப் படத்தை கொடுத்திருந்தார். இப்படத்தின் கிடைத்த வெற்றி மூலம் சிம்பு தொடர்ந்த அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சிம்புக்கு தரமான ரீ என்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.

தற்போது வெங்கட் பிரபு நாக சைத்தன்யாவை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த கையுடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியில் படம் உருவாக உள்ளது.

Also Read : ரிலீசுக்கு முன்பே 90 கோடி லாபம் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. சூர்யா, சிம்பு எல்லாம் ஓரமா போங்க

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு கனகச்சிதமாக பொருந்துவார் என வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளார். மேலும் வெங்கட் பிரபுவின் படத்தில் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் வெங்கட் பிரபு இணையும் படத்திலும் பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் படம் கண்டிப்பாக தாறுமாறாக இருக்கும் என ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

Also Read : என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ்.. பிரின்ஸ் பட ட்ரைலரை அறிவித்த சிவகார்த்திகேயன்

Trending News