கடனை அடைக்க மின்னல் வேக திட்டம்.. ஒன்னொன்னா தட்டி தூக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து அயலான் படமும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் எஸ்கே 20 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இன்னும் இருபது நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி உள்ளது. அதையும் மிக விரைவில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது.

அட்லியின் உதவியாளர் அசோக் இப்படத்தை இயக்குகிறார். தற்போது சிங்கபாதை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கயுள்ளது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அதாவது அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சிவகார்த்திகேயனை நடிக்கயுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் தந்தையாக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவியும், மகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் டி இமான் இசை அமைக்கயுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

இதை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் பெரியசாமி இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படம் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் மிகப்பெரிய கடன் நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மின்னல் வேகத்தில் கடனை அடைப்பதற்காக சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →