திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட வெற்றியை தொடர்ந்து இப்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றன. இதில் பிரின்ஸ் படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார்.

சிவா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு முதன் முதலாக விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளர் ஆனார்.

Also Read: ஜாதியை பார்க்கும் சிவகார்த்திகேயன்.. வலையில் சிக்கிய அதிதி ஷங்கர்

இதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் காமெடி ரோலில் நடிக்கும் போது இவர்கள் இருவருக்கும் நடுவே நல்ல நட்பு உருவானது. அதன் பின் தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக்கினார்.

அதன் பின்னர் காக்கி சட்டை திரைப்படத்தின் போது இருவருக்கும் நடுவில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதை இவர்கள் இருவருமே மறுத்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும்படி வெட்ட வெளிச்சமாகவே இருக்கிறது. சமீபத்தில் நடிகர் பாண்டியராஜனும் இதை பற்றி பேசியுள்ளார்.

Also Read: 2022ல் அடுத்தடுத்து விவாகரத்து செய்த கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்.. தனுஷை தொடர்ந்து பிரிந்த 2 ஜோடிகள்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு வாழ்த்து சொன்ன சிவா, அன்று வெளியான நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் பற்றி வாயை திறக்கவில்லை. சிவகார்த்திகேயனை தூக்கிவிட்ட தனுஷையே அவரை மறந்து விட்டார் என பாண்டியராஜன் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பாண்டியராஜன் நடுவாரக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய பாண்டியராஜன் அந்த காலத்தில் நடிகர்கள் எல்லோரும் ரொம்ப ஒற்றுமையாக இருப்போம், ஒருவொருக்கொருவர் நன்றாக பேசி பழகுவோம் என்றும் இப்போது இருக்கும் ஹீரோக்களிடையே ஈகோ அதிகமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

Also Read: ஜெயம்ரவியால் விலக்கப்பட்டாரா சிம்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

 

Trending News