திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடாமல் துரத்தும் ஏழரைச் சனி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த அயலான் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் அவருடைய அடுத்த படத்திற்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது ஏஆர் முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போயிற்று. இப்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை அவுட்டோரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வேலையில் இறங்கி இருந்தனர். ஆனால் தென்னிந்திய சங்கத்தினர் வெளிமாநிலத்தில் சூட்டிங் நடத்தக்கூடாது என தயாரிப்பு சங்கத்தினருக்கு கடிதம் கொடுத்திருந்தனர்.

Also Read : சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

இதனால் இப்போது திரைப்படம் மற்றும் சீரியல் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணி போட்டுள்ள படத்தின் ஆரம்பம் தொடங்கும் முன்னரே சிக்கலை சந்தித்துள்ளது. எவ்வாறு படப்பிடிப்பு நடத்துவது என்று தெரியாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே வெளிமாநில யூனிட்டுகளை பயன்படுத்துவதில்லை என தயாரிப்பு சங்கத்தினர் முடிவெடுத்த பின்பும் அதனை சிலர் மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அடுத்து தான் இந்த விஷயம் பூதாகரம் எடுத்து வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்த கூடாது என அதிரடியாக கூறியுள்ளனர்.

Also Read : நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

Trending News