வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லீக்கான சிவகார்த்திகேயனின் பட டைட்டில்.. SK-21 படத்தில் கைவரிசையை காட்டிய கமல்

Sivakarthikeyan’s movie title for Leaked: நடிகராகவும், தயாரிப்பாளராகவும் துவண்டு போய் இருந்த கமலுக்கு அடித்த ஜாக்பாட் தான் விக்ரம். கமலைப் பொறுத்தவரை எப்பொழுதுமே கமர்சியல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். வித்தியாசமான படங்களை எடுத்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே பயணம் செய்வார்.

ஆனால் தற்போதைய காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் வசூல் ரீதியாக படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2, தக் லைப் போன்ற படங்களில் மூலம் வெற்றியை பெற வேண்டும் என்று ஒரு பக்கம் முயற்சி செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தயாரிப்பாளராகவும் லாபத்தை பார்க்க வேண்டும் என்று இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் யாரை வைத்து படத்தை தயாரித்தால் வசூல் ரீதியாக லாபம் பெறுமோ அவரை லாக் செய்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படங்களுக்கு குடும்பங்களிலிருந்து ஏகபோக வரவேற்பு எப்பொழுதுமே கிடைக்கும்.

Also read: சிவகார்த்திகேயனை நம்பி மோசம் போன இளம் காமெடி நடிகர்.. பாதி வடிவேலுவாய் மாறிய SK

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார். இவருடன் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி இணைந்திருக்கிறார். மேலும் இப்படத்தை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று மொத்த பட குழுவும் முடிவில் இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் இப்படத்தில் டைட்டில் இதுவாகத்தான் இருக்கும் என்று கொஞ்சம் கசிய ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் SK 21வது படத்தின் டைட்டில் என்னவென்றால் “போர் கண்ட சிங்கம்”. இப்படத்தின் டைட்டில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் “உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே” என்ற பாடலில் உள்ள வரிகளில் வரும் போர் கண்ட சிங்கம் என்கிற வார்த்தையை எடுத்து படத்தின் டைட்டிலாக கமல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி, படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகார அறிவிப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தனுஷ் ஓவரா முட்டுக் கொடுக்கும் ஹீரோயின்.. சிவகார்த்திகேயன் கையில் இருந்து ரெக்க முளைச்சி பறந்த கிளி

Trending News