வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்.. கமல் படத்திற்கு பின் வெற்றி இயக்குனருடன் கூட்டணி

கோலிவுட்டில் மளமளவென வெற்றிகளை குவித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் படுத்தோல்வியாக அமைந்தது. இதனால் மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டும் என அடுத்தடுத்த படங்களில் வரிசையாக கமிட் ஆகி கொண்டிருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள்தான் 100 கோடி வசூலை வாரி குவித்து அவருடைய மார்க்கெட்டை எகிற வைத்தது.

தற்போது சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதை அடுத்து ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமல் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

Also Read: அக்கட தேசப்படத்திற்கு ஆர்வம் காட்டி வரும் 5 நடிகர்கள்.. மொக்கை வாங்கிய பிரின்ஸ்

இதில் ராணுவ வீரராக நடிப்பதாகவும், அவரின் திரைப்படத்தில் இது மிக முக்கிய படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அவர் மீண்டும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி உடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அட்லீயும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமான டான் படத்தை இயக்கியவர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக சிபி சக்கரவர்த்தி ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்தது.

Also Read: அயலானுக்கு போட்டியா இல்ல அவதாருக்கு போட்டியா.? வெங்கட் பிரபு சொன்ன தளபதி-68 சீக்ரெட்

ஆனால் சில பல காரணமாக அவர்கள் கூட்டணி இணையாமல் போன நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார் சிபி சக்கரவர்த்தி. எனவே சிவகார்த்திகேயனும் கமலின் தயாரிப்பில் நடித்து வரும் படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்ல ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதையில்தான் இப்போது சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டில் இதன் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தை குறித்த முழு அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

Trending News