புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொந்தளித்த சிவராஜ்குமார் ரசிகர்கள்.. ஆரம்பிக்கும் முன்னே தலைவர்169 படத்திற்கு வந்த பிரச்சனை!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தலைவரின் 169 படத்தை இயக்குவார் என்ற செய்தி தற்போது ஒருவழியாக உறுதியாகிவிட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அந்த படத்திற்கு தமிழ் அல்லாது வேறு ஒரு மொழியில் இருக்கும் நாயகர்களை போட்டால் படம் இன்னும் நன்றாக வரும் என்ற எதிர்பார்ப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை அணுகினர். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே மாரடைப்பால் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பில் இருந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது குடும்பம். எனினும் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்து அவர்களை தேற்றியதுடன் தற்போது படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

இப்பொழுது ரஜினிகாந்த் படத்தில் சிவராஜ்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதைப்பற்றி சிவராஜ்குமார் இடம் கேட்டதற்கு, ஆம் ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு இருக்கிறது என்ற ஒரு பதிலைக் கூறிவிட்டு சென்றார்.

இப்பொழுது ரஜினிக்கு ஒரு மாஸ் வில்லனாக நடிக்கிறார் சிவராஜ்குமார் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. சிவராஜ்குமாரை கன்னட ரசிகர்கள் ஒரு கடவுள் போல் பார்த்து வருகின்றனர். இப்பொழுது சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கும் செய்தியை கேட்டு கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ரஜினியின் பிறந்த ஊரான கர்நாடகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் அவருக்கே, கன்னட சூப்பர் ஸ்டாரான சிவக்குமார் வில்லனாக நடிக்கப் போவது அங்கே பாதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.

Trending News