வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்

மாநாடு படம் சிம்புக்கு மட்டுமல்ல எஸ்ஜே சூர்யாவுக்கும் தரமான கம்பேக்கை கொடுத்திருந்தது. இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஒரு பக்கம் ஹீரோவாக எக்கச்சக்க படங்களில் நடித்து வருகிறார்.

மறுபுறம் டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். இப்போது எஸ்ஜே சூர்யாவின் லயன் அப்பில் பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 போன்ற படங்கள் உள்ளது. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஒருவரின் படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். இது எஸ்ஜே சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Also Read : எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்

அதாவது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். அதேபோல் தமிழில் கமலின் இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறது. இந்த இரண்டு படங்களிலுமே எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

அதிலும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் எஸ்ஜே சூர்யா பேசுகையில் ஆண்டவரின் முகத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை என்றும், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு பகுதியாக தான் இருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read : லிப் லாக் காட்சியில் நடித்த 5 நடிகர்கள்.. விஜய்யை கிஸ் அடிக்க வைத்த எஸ்ஜே சூர்யா

மேலும் இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் லால் ஏஞ்சல்சில் 10 நாட்கள் நடக்க இருக்கிறதாம். இதில் எஸ் ஜே சூர்யா கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்தியன் 2 படம் 2024 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கமல் இந்த படத்திற்காக பல விஷயங்களை மெனக்கெட்டு செய்து வருகிறார்.

இந்த சூழலில் எஸ் ஜே சூர்யா கமலுக்கு வில்லன் என்றால் கதை எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய், சிம்பு போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்த எஸ் ஜே சூர்யா ஆண்டவருக்கு ஈடு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியன் 2 வெளியானால் இதற்கு விடை கிடைத்துவிடும்.

Also Read : லியோவிற்கு பின் படம் முழுக்க வில்லத்தனத்தில் ஊறிப்போன மிஸ்கின்.. எஸ்ஜே சூர்யாவை ஓரம் கட்டும் இயக்குனர்

Trending News