Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்னம்மா சீனி தண்ணில சீடைய போட்டு வச்சிருக்க.. அது சீடை இல்ல நான் செஞ்ச குலோப் ஜாமுன், தீபாவளி மீம்ஸ்

என்னம்மா சீனி தண்ணில சீடைய போட்டு வச்சிருக்க.. அது சீடை இல்ல நான் செஞ்ச குலோப் ஜாமுன், தீபாவளி மீம்ஸ்

Memes: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அனைவரும் புது துணி, பட்டாசு என தயாராகிவிட்டனர். அதேபோல் இல்லத்தரசிகள் விதவிதமான பலகாரங்களை செய்து அடுக்கி வைத்திருக்கின்றனர். வழக்கமாக தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது முறுக்கு […]

Memes: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அனைவரும் புது துணி, பட்டாசு என தயாராகிவிட்டனர். அதேபோல் இல்லத்தரசிகள் விதவிதமான பலகாரங்களை செய்து அடுக்கி வைத்திருக்கின்றனர்.

diwali-memes
diwali-memes

வழக்கமாக தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது முறுக்கு தான். அதேபோல் அம்மாக்கள் அதிரசம், ரவா லட்டு என அசத்தி விடுவார்கள். இதற்கு ஈடாக ஒரு இனிப்பும் தவிர்க்க முடியாத பலகாரமாக மாறி இருக்கிறது.

diwali-memes
diwali-memes

அதுதான் குலோப் ஜாமுன். செய்வது மிகவும் எளிது என்பதால் இப்போதைய குடும்ப தலைவிகள் தீபாவளி என்றால் பாத்திரம் நிறைய இந்த ஸ்வீட்டை செய்து வைத்து விடுகின்றனர்.

diwali-memes
diwali-memes

சில நேரங்களில் இது சொதப்புவதும் உண்டு ஒன்று குலோப் ஜாமுன் சர்க்கரை பாகில் கரைந்து அல்வா போல் மாறிவிடும். இல்லையென்றால் கடிக்க முடியாதபடி இறுகிவிடும். பிள்ளைகள் எஸ்கேப் ஆனாலும் கணவர்கள் இதை சாப்பிட்டு தான் ஆக வேண்டும்.

diwali-memes
diwali-memes

இல்லை என்றால் தலைவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் தீபாவளிக்கு ஆண்கள் கத்தி சுத்தியல் என ஆயுதங்களோடு பலகாரத்தை சாப்பிட தயாராக இருக்கின்றனர். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

அதில் சீனி தண்ணில எதுக்குமா சீடைய போட்டு வச்சிருக்க என கணவர் கேட்பதும் அது நான் செய்த குலோப் ஜாமுன் என மனைவி அதிர்ச்சி கொடுப்பதும் போன்ற மீம்ஸ் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.