வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திரிஷா மேட்டரில் கப்பு சிப்புன்னு வாயை மூடி கொண்ட ரெண்டு பெரும் தலைகள்.. அதுக்குன்னு போன சுவிட்ச் ஆப் பண்ணுவீங்க!

South Indian Film Artistes Association- Nadigar Sangam: அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் அதற்கு எதிராக நடிகர் சங்கம் குரல் கொடுக்காமல் இருப்பது தான் ஆச்சரியம். இப்போது நடிகை திரிஷாவை பற்றி தரகுறைவாக கருத்துகளை பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜுவை எதிர்த்து தமிழ் சினிமா கலைஞர்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதிலும் இந்த விஷயத்தில் முதல் ஆளாக இயக்குனரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் தளத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்தார். ‘எந்த ஆதாரமும் இன்றி பொது வெளிகளில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பியவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நடிகர் சங்கப் பொறுப்பில் இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் இதற்கு தகுந்த பதில் கொடுத்து, நடவடிக்கையும் எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என்று சேரன் ட்விட் செய்திருந்தார்.

இதோடு நிறுத்தி விடாமல் கார்த்தி மற்றும் விஷால் இருவருக்கும் எவ்வளவோ முறை போன் பண்ணினாராம், அவர்கள் எடுக்கவில்லையாம். திரும்ப கூட கூப்பிட மாட்டேன் என்கிறார்களாம். ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே போன ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுட்டாங்க. ஆனால் இந்த விஷயத்தில் சேரனை தொடர்ந்து மன்சூர் அலிகான், அர்ச்சனா கல்பதி, கஸ்தூரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Also Read: அடுத்த ஜெயலலிதாவாக மாறும் திரிஷா.. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அரசியல் பிரபலம்

மோசமாக நடந்து கொள்ளும் நடிகர் சங்கம்

ஆனால் இப்போது வரை நடிகர் சங்கம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. எதற்காக அவர்களெல்லாம் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நடிகர் நடிகைகளுக்கு எதிராக ஒரு விஷயம் நடந்தால் முதல் ஆளாக குரல் கொடுக்க வேண்டியது அவர்கள்தான். ஆனால் அவர்களே இவ்வளவு மெத்தனமாக இருக்கிறார்களே! என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

இவ்வளவுதானா நடிகர் சங்க லட்சணம்! மனசாட்சியே இல்லாமல் நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். ஆவுனா செய்தியாளர்களை சந்தித்து திணற திணற பேட்டி கொடுக்கும் நாசர், விஷால், கார்த்தி எல்லாம் எங்க போனார்கள் என்றும் திரிஷாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

இதையெல்லாம் பார்த்து தான் திரிஷாவும், ‘பப்ளிசிட்டிக்காக எந்த லெவலுக்கு வேணாலும் கீழே இறங்கும் கீழ்தரமான மனிதர்களை திரும்பத் திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டம் தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காவல்துறையை தான் நம்புகிறாரே தவிர நடிகர் சங்கத்தை இல்லை. இந்த நடிகர் சங்க பொறுப்பாளிகள் எதுவுமே செய்ய மாட்டார் என்று அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு.

Also Read: திரிஷாவிற்காக குரல் கொடுக்காத 4 பேர்.. அரசியல் கட்சி தொடங்கியும் பதுங்கி இருக்கும் விஜய்

Trending News