துரோகம் வெல்லுமா? தந்தையை வீழ்த்தி கட்சியைப் பிடிக்கும் அன்புமணி

சமூகநீதிப் போராளி என்று அறியப்பட்டவர் மருத்துவர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியும் இடதுசாரி கொள்கையை உயர்த்திப் பிடித்தது. ஆனால் இன்று பாஜகவின் ஊது குழலாகவே தானும் மாறி, கட்சியையும் மாற்றி விட்டார் அன்புமணி. தந்தையாலே பெற்ற அதிகபட்ச பதவி மத்திய அமைச்சர்.

தந்தையை வீழ்த்தி கட்சியை கைப்பற்றிய அன்புமணி என்ன சாதிக்கப் போகிறார் என்பது மே மாதம் 4ம் தேதி தெரிந்துவிடும். மாமனார் என்.டி ஆரை வீழ்த்தி தெலுங்கு தேசத்தை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு இன்று முதலமைச்சராக இருக்கிறார்.

துரோகம் வென்றது ஆந்திராவில். துரோகம் வெல்லாது என்று கதறுகிறார் மருத்துவர் ராமதாஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை சென்று கூடப் பார்க்காமல் தொலைபேசியில் மருத்துவர்களிடம் விசாரித்தேன் என்கிறார்.

இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று கேட்பதற்கு பதிலாக மாற்றிக் கேட்க வைத்துவிட்டார் அன்புமணி. மருத்துவர் ராமதாஸை நேசிக்கும் நெஞ்சங்களை ரொம்பவே நோக வைத்துவிட்டார் அன்புமணி.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →