அரசியல் இப்போ ஃபேஷன் ஆயிடுச்சு! ஸ்டாலின் முதல் விஜய் வரை.. இது Gen Z ஆட்டம்

இப்போலாம் ஒருத்தர் எந்தக் கட்சிக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு அவங்க போடுற டி-ஷர்ட்டைப் பார்த்தாலே கண்டுபிடிச்சிடலாம். முன்னாடி எல்லாம் கட்சித் துண்டை தோள்ல போட்டுட்டு போவாங்க, ஆனா இப்போ இருக்கிற “Gen Z” பசங்க ஸ்டைலே வேற. ஸ்டாலின் ஆகட்டும், விஜய் ஆகட்டும் அவங்க உருவம் போட்ட டீ-ஷர்ட்கள் வைரல். இது வெறும் அரசியல் கிடையாது, இது ஒரு லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரெண்ட்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் ஓட்டும் போதோ இல்ல ஜிம்ல வொர்க் அவுட் பண்ணும் போதோ போடுற அந்த ஸ்போர்ட்ஸ் லுக் பசங்க மத்தியில செம ஹிட். அந்த ஸ்டைலை அப்படியே காப்பி அடிச்சு, அவரோட போட்டோ போட்ட ‘கூகுள் மேப்’ டிசைன் டி-ஷர்ட்கள், லோகோ போட்ட உடைகள்னு ஆன்லைன்ல இப்போ அள்ளிட்டு போறாங்க. டிசைன் பார்க்குறதுக்கு ரொம்ப மாடர்னா இருக்கறதுனால காலேஜ் பசங்க கூட இதை விரும்பி போடுறாங்க.

இன்னொரு பக்கம் நம்ம விஜய்யின் அரசியல் என்ட்ரி. சொல்லவே வேண்டாம், தமிழக வெற்றி கழகம் அறிவிச்சதுல இருந்தே அந்த மஞ்சள்-சிவப்பு கொடி கலர்ல டி-ஷர்ட்ஸ், சிங்கம் லோகோ போட்ட ஹூடீஸ் என மார்க்கெட்டே அதிருது. விஜய் பட ரிலீஸ்க்கு எப்படி டி-ஷர்ட் அடிப்பாங்களோ, அதைவிட இப்போ கட்சி மாநாடுகளுக்கும், மீட்டிங்களுக்கும் பசங்க செம ஸ்டைலா ரெடியாகி வர்றாங்க.

ஏன் இந்த மாற்றம்னு யோசிச்சு பார்த்தா, இந்த காலத்துப் பசங்களுக்கு அரசியல்னா மொக்கையான விஷயம் கிடையாது. அவங்களுக்கு பிடிச்ச தலைவரை ஒரு ‘ஐகான்’ மாதிரி பார்க்குறாங்க. ஒரு ஃபேமஸ் பிராண்ட் டி-ஷர்ட் போடுறதுக்கு பதிலா, தங்களுக்கு பிடிச்ச தலைவரோட ஸ்டைலிஷ் ஆன போட்டோ போட்ட டி-ஷர்ட் போடுறது ஒரு ‘கெத்து’ன்னு நினைக்கிறாங்க. இதனாலேயே சாதாரண காட்டன் டி-ஷர்ட்ல இருந்து ஓவர்சைஸ் டி-ஷர்ட் வரைக்கும் அரசியல் மாஸ் காட்டுது.

இந்த டிரெண்டைப் பார்த்துட்டு இப்போ நிறைய ஸ்டார்ட்-அப் கம்பெனிகளும், இன்ஸ்டாகிராம் பக்கமும் ஸ்பெஷலா அரசியல் ஃபேஷன் உடைகளை டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. வெறும் போட்டோவை மட்டும் வைக்காம, அந்த தலைவர்கள் பேசுன பஞ்ச் டயலாக்ஸ், அவங்களோட போஸ் எல்லாத்தையும் கிராஃபிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்றாங்க. இது பாக்குறதுக்கு ரொம்ப ‘கூலா’ இருக்குறதுனால ரீல்ஸ் செய்யுற பசங்களுக்கும் இது ஒரு பெரிய கன்டென்ட் ஆயிடுச்சு.

மொத்தத்துல, இன்னைக்கு அரசியல் களம் டிஜிட்டல் ஸ்கிரீன்ல இருந்து நம்ம டி-ஷர்ட் வரைக்கும் வந்துடுச்சு. 2026 தேர்தல் நெருங்க நெருங்க, இந்த ஃபேஷன் இன்னும் வேற லெவலுக்கு போகப்போகுது. ஓட்டு போடுறது ஒரு பக்கம் இருந்தாலும், தங்களுக்குப் பிடிச்ச தலைவரை உடைகள் மூலமா கொண்டாடுற இந்த கல்ச்சர் இப்போதைய இளைஞர்களோட ஒரு அடையாளமாவே மாறிடுச்சுன்னு தான் சொல்லணும்!

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →