சிறப்பு கட்டுரைகள்

இந்தியளவில் 100 கோடி வசூலை அதிகமாக தொட்டுப் பார்த்த 9 ஹீரோக்கள்.. ரஜினி, விஜய், அஜித்துக்கு எத்தனாவது இடம்?

By Arun · 14 ஜூன் 2025 · Updated 07 மார்ச் 2026
salman-khan-rajini-vijay-ajith

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்கள் என்று ரசிகர்கள் பார்ப்பதில்லை நல்ல கதை, திரைக்கதை மற்றும் பீல் குட் மூவி இருந்தால் மட்டுமே தமிழகத்தில் வசூலை அள்ள முடியும். இப்படி இந்தியளவில் 100 கோடி வசூலை அதிகமாக தொட்ட ஹீரோக்களின் பட்டியலை பார்க்கலாம்.

முதலிடத்தில் சல்மான் கான் மற்றும் அக்ஷய்குமார் இருக்கின்றனர் கிட்டத்தட்ட 18 படங்களில் 100 கோடி வசூலை தொட்டுள்ளனர். இரண்டாவதாக அஜய் தேவ்கான் 16 படங்களில், தளபதி விஜய் 13 படங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 11 படங்களில் 100 கோடி வசூலை தாண்டி உள்ளனர்.

5வது இடத்தில் சல்மான் கான் 10 படங்களில், ஆறாவது இடத்தில் அஜித் குமார் 9 படங்களில், ஏழாவது இடத்தில் மகேஷ்பாபு 8 படங்களில் 100 கோடி வசூலை ருசித்து உள்ளனர். ஏற்கனவே தளபதி விஜய் அரசியல் என்ட்ரி என்பதால் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்பதை அறிவித்துவிட்டார்.

74 வயது தாண்டியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக கூலி, ஜெய்லர் 2 ஆகிய படங்களில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார்.இந்த படங்கள் கண்டிப்பாக ஒரே வாரத்தில் 400-500 கோடி வசூலை அசால்டாக தொடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அஜித் ஒருபுறம் கார் ரேஸில் பிஸியாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் வெளியிடுவேன் என்பதை உறுதியாக உள்ளார். இதனால் தனது அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் அல்லது மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம்.

இந்தியளவில் பார்க்கும்போது சல்மான் கான் மற்றும் அக்ஷய்குமார் இருவரும் முதல் இரண்டு இடத்தை இறுக்கமாக பிடித்துள்ளனர். பாலிவுட் படங்கள் சில மாதங்களாக ஹிட் கொடுப்பதில்லை என்பதால் கோலிவுட் இயக்குனர்களை நம்பி கதை கேட்டு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர் பாலிவுட் டாப் ஹீரோக்கள். இது நம்ம சினிமா அடுத்த லெவலுக்கு போயிடுச்சு என்பதை உறுதி செய்துள்ளது.