சிறப்பு கட்டுரைகள்

விஜய் சாருக்கு அவ்ளோ லவ்.. என்கிட்டதான் முதலில் சொன்னாரு, மனம் திறந்த கௌசல்யா

By Vijay · 22 ஜூன் 2025 · Updated 07 மார்ச் 2026
Vijay sir has so much love...he told me first. Actress kowsalya opened up...

Vijay : நடிகர் விஜய் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் இளம் வயது விஜய் என்றாலே அவ்வளவு அழகாகவும் க்யூட் ஆகவும் இருப்பார் நம் இளைய தளபதி. இவர் செம க்யூட் ஆக இருந்த படங்கள் எல்லாமே அந்த காலகட்டத்தில் நல்ல ஹிட் கொடுத்தது. அதிலும் பிரியமானவளே, நேருக்கு நேர், பிரியமுடன், குஷி இந்த திரைப்படங்களில் க்யூட்னஸ் சற்று அதிகமாகவே தான் இருக்கும்.

இந்த வரிசையில் பிரியமுடன் படம் அனைவருக்கும் மனதை கவர்ந்த படமாகத்தான் இருந்து வருகிறது அதுவும் நடிகர் விஜய் அவர்களுக்கு அதில் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் கூட. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் மட்டும் அல்லாமல் நடிகை கௌசல்யா அவர்களும் அவ்வளவு அழகாக இருப்பார் பாரதிக்கு கண்ணம்மா மற்றும் பூஜா வா, பூஜா வா… சாங் இன்று வரையில் எங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை கௌசல்யா அவர்கள் அளித்திருந்த பேட்டியில் நடிகர் விஜய் அவர்களை பற்றி சுவாரசியமான சில தகவல்களை நமக்கு வழங்கி உள்ளார். அதுவும் நடிகர் விஜய் அவர்களின் திருமண தகவல் என்பது மிகவும் சுவாரசியமானது.

இந்த பேட்டியில் நடிகை கௌசல்யா அவர்கள், நானும் நடிகர் விஜய் அவர்களும் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு விமானத்தில் ஒன்றாக பயணித்தோம். அப்போது நடிகர் விஜய் அவர்கள் சங்கீதாவை பற்றியும், அவர்களை திருமணம் செய்து கொள்வதை பற்றியும் மனம் திறந்து கூறினார்.

அவ்வளவு லவ் விஜய் சாருக்கு

அவ்வளவு லவ் விஜய் சாருக்கு சங்கீதா மேடம் மேல். அனேகமாக என்னிடம் தான் முதலில் கூறினார் என நினைக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் விஜய் சார் எப்போதுமே “ஸ்வீட் ஹார்ட்” மற்றும் பணிவுள்ள மனிதர் எனவும்.

இந்த புகழ் மற்றும் பிரபலம் அனைத்திற்கும் பொருத்தமானவர் விஜய் சார் தான். அவர் இன்னும் மென்மேலும் வளர்ந்து உச்சிக்கு செல்ல வேண்டும் அதற்கான எல்லா தகுதியும் விஜய் சாருக்கு உண்டு எனவும் இந்த பேட்டியில் நடிகை கௌசல்யா அவர்கள் கூறியுள்ளார்.