2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

உலகக் கோப்பை காய்ச்சல் முடிவடைந்து விட்டது. அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சென்ற ஆண்டு போல அதே 10 அணிகள் மோத உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுடைய வீரர்களை நேற்று ஏலத்தின் மூலம் தேர்வு செய்தது .

2024 ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 11ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது .எல்லா அணிகளும் தங்களுக்கு தேவையான சரிசமமான பலம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது.எப்பொழுதுமே ஐபிஎல் போட்டிகளில் பெரிதும் ஆதிக்கம் செய்யும் சென்னை அணிகள் வீரர்களின் விபரம்.

சென்னை அணி வீரர்கள் விபரம்: சென்னை அணியை பொறுத்தவரை பெரும்பாலும் அதே வயதான வீரர்களே இம்முறையும் பெரும்பங்கு வகிக்கின்றனர். பேட்ஸ்மேன் என்ற வகையில் , மகேந்திர சிங் தோனி, ருத்ராஜ் கெய்க்வார்டு, அஜங்கிய ரகானே, சேக் ரஷீத் போன்ற வீரர்கள் அடங்கியுள்ளனர். இதில் பெரும்பான வீரர்கள் ஏற்கனவே சென்னை அணியில் விளையாடி உள்ளனர்.

ஆல்ரவுண்டர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, சிவம் டுபே, மொயின் அலி, மிட்செல் சான்டர் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். இவர்களை தவிர அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சிறந்த வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல் போன்ற இரண்டு புதுமுக வீரர்களை இம்முறை ஆல் ரவுண்டர் வரிசையில் தேர்வு செய்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் தீபக்சஹார் ,ராஜ்வரதன் ஹாங்கரிக்கர் , தேஷ் பாண்டே, பிரசாந்த் சோலாங்கி இலங்கை அணியைச் சேர்ந்த மதிஷா பகிரானா போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அல்லாது ஸ்பின் பௌலிங் யூனிட்டில் மதிஷா தீட்சனா, முகேஷ் சவுத்ரி , சிம்ரஜித் சிங் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

எப்பொழுதும் போல அனுபவம் இல்லாத அதிரடி அணியாகவே இருக்கிறது சென்னை அணி. ரவிந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி சிவம் டுபே, தேவாங் கான்வே போன்ற பழைய வீரர்களை வைத்தே ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.